பக்கம்:மின்னல் பூ.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மலையொன்று


எங்கிருந்தோ ஒரு சிட்டு-வானில்
ஏறிப் பரந்ததென் முன்னே
இங்கிது மாமலைக் கும்மேல்-உயர்ந்
தேகுதல் போலவே கண்டேன்

மிக்க பொய்த் தோற்றம் இதனால் - அந்த
வெற்பின் பெருமையும் போமோ?
பக்கச் சிறுகுரல் பெரிதாம் - அதைப்
பார்த்து மயங்குவோர் பலராம்.


மலை தூரத்தில் இருக்கிறது. சிட்டு அருகிலே பறக்கிறது. பக்கத்தில் பறக்கும் சிட்டு மலையைவிட வானில் உயர்த்து காண்கிறது. இது ஒரு பொய்த் தோற்றமல்லவா?

செண்டு - குதிரை வையாளி வீதி.

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/42&oldid=1116808" இலிருந்து மீள்விக்கப்பட்டது