பக்கம்:மின்னல் பூ.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கேட்டதும் கண்டதும்
1

குயில்கூவும் காலமதில்
கூடியவர் போகையிலே-
மயில் போன்ற பெண்ணணங்கும்
மதன் போன்ற காளையுமாய்க்

(குயில்கூவும்)

2

பொன்மஞ்சள் கதிர்களெங்கும்
பூமிதனிற் படர்ந்திருக்க
மின்வண்ண மெல்லிதனை
மெதுவா யணைத்தவனும்
இன்ப வெள்ளம் நீந்திமிக
எழிலாகத் தனிவழியே

(குயில்கூவும்)

3

செஞ்சொலிள மைனாவும்
செங்கண் சிறைச் செம்போத்தும்
கொஞ்சிக்கொஞ்சித் துணைகூவும்
கோலமொழி கேட்கவில்லை.
வஞ்சியவள் அன்பொழுகும்
வார்த்தை செவி நிறைந்திருந்தான்

(குயில்கூவும்)

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/61&oldid=1117613" இலிருந்து மீள்விக்கப்பட்டது