பக்கம்:மின்னல் பூ.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தில்லை. உரைநடையிலேயே எல்லாம் எழுதி விடலாம். ஆகவே இது முடியாத செயல்.

ஆனால், ஒரு சில பகுதிகளுக்கு அவன் முக்கியமான குறிப்புகள் கொடுக்கலாம். படிப்பவர்களுக்கு அவை ஓரளவுக்குத் துணையாக இருக்கும்.

அவசரக் கோலத்திற்குக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இப்படி ஓர் ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆனால், இது திருப்தியான ஏற்பாடு அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். கவிஞன் குறிப்பு எழுதுகிறானென்றால் படிப்பவர்களின் கற்பனைக் குதிரை அந்தக் குறிப்புக்குள்ளேயே வட்டமிடத் தொடங்கிவிடக்கூடாது. அப்படி ஏற்பட்டுவிட்டால் அது எதிர்பார்த்த பயனுக்கு நேர்மாறான விளைவாக முடிந்துவிடும். வானத்திலே அந்தக் குதிரை சஞ்சரிப்பதற்குக் கவிஞன் வேகம் கொடுக்கவே விரும்புகிறான் என்பதை நன்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நின்று உற்றுப் பார்க்க எப்படியாவது நேரம் கண்டுபிடித்துக் கொள்ளத்தான் வேண்டும். அதையே நான் பெரிதும் வற்புறுத்த ஆசைப்படுகிறேன்.

எந்திரங்களின் உதவியால் மனிதன் வேலை செய்யும் நேரம் குறைந்து ஒழிவு மிகுதியாகக் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், எந்திர வசதிகளைப் பெரிதும் பயன்படுத்தும்

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/9&oldid=1110308" இலிருந்து மீள்விக்கப்பட்டது