பக்கம்:மின்னல் பூ.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குயில்


தேன்குழைத்து வெண்ணிலவு
தென்றலிலே வீசியதோ
தெள்ளமுதம் களிமிகுந்து
திசையெல்லாம் பொங்கியதோ
வான் செழித்துப் பூத்திருந்த
வண்ணமணித் தாரகைகள்
மாமதியின் மதுமயக்கில்
வளரிசையாய்ப் பொழிந்தனவோ
ஊன்குழையக் குரலெடுத்து
உயிர் தழைய மிதந்துவரும்
உன்காதல் தனிப்பாட்டிற்
குவமை சொல மொழியுண்டோ
மீன்கழித்து நதிக்கரையில்
வெண்கொழித்த மணற்பரப்பில்
மெல்லநடந் தமர்ந்த வென்றன்
விழிக்கெட்டாப் பொழிற்குயிலே?

உலகத்துச் சிறுமையிலே
உளம்வாடி ஏங்கிவந்தேன்
உன்னிதயக் கிளர்ச்சியிலே
ஒன்றியுனை வாழ்த்துகின்றேன்

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/98&oldid=1121436" இலிருந்து மீள்விக்கப்பட்டது