பக்கம்:மின்னொளி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்னொளி

பேசறே? ஒனக்கு அப்படியொண்ணும் வந்துட லேம்மா. கவலைப்படாதே.

மின்னொளி :- உம் எனக்கு எல்லாம் வந்தாயிற்று.இன்னும் என்ன இருக்கிறது? விருப்பமற்ற வனே மணக்க வேண்டுமென்பதை எண்ணி எண்ணி நெஞ்சம் உடைந்தது. உடலழகு மட் டும் எதற்கென்று அம்மை வந்து அதையும் குலைத்துவிட்டது பச்சை மரம் போலிருந்த மேனி, தீய்ந்து கரிக்கட்டையாகி விட்டதே. எலும்பும் தோலுமான இந்தக் கோலத்தில் நான் வாழவேண்டுமா உலகில்? அப்பா!....

பொன் :- நம்மால் ஆவது என்னம்மா இருக்கிறது? அவனன்றி அணுவும் அசையாது. எல்லாம் வினைப்பயன்.

(ஒரு வேலையாள் ஓடிவருகிறான் வேகமாக)

வேலையாள் :- எசமான் எசமான் பள்ளிக்கூடம் பத்தி எரிஞ்சி போச்சுங்க.

பொன் :- (பதறி) அடடே! ஏண்டா? எப்போ?

ஆள் :- இப்பத்தானுங்க. வாத்தியாரு உள்ளே இருக் கார்னு, கதவைத் தாழ்போட்டு நெருப்பு வச்சி ருக்கானுங்க.

மின்னொளி :- (அச்சமும் ஆவலுமாய் எழுந்து உட்கார்ந்து) ஆ அவர் உள்ளே சிக்கி எரிந்துபோய்விட்டாரா?

ஆள் :- வெளியே போயிருந்திருக்கிறூரும்மா. அவ ருக்கொண்னும் ஆபத்தில்லே. உள்ளேபோன

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னொளி.pdf/32&oldid=1412916" இலிருந்து மீள்விக்கப்பட்டது