பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$96 மாமல்லன் சிம்சோன் னர். உனது வலிமையின் மாட்சியைப் பலரும் காண விரும்பு கின்றனர். விரைந்து எழு. என்ளுேடு வா. முதலில் நான் உனக்கு உணவளிக்க வேண்டும். பின் உன்னை மினுக்கேற்றிச் சிறப்பாக உடுத்தி பெலித்திய ஆண்டைகளுக்கு இடையே, நல்ல தோற்றத்துடன் பொருத்தமான முறையில் நிறுத்த வேண்டும். சிம்சோன்: நான் ஓர் எபிரேயன் என்பதை நீ நன்கறி வாய். எனவே எங்கள் மதச் சட்டத்தால் ஒதுக்கப்பட்ட , அவர்களின் மதச் சடங்குகளிலே நான் கலந்துகொள்ள (Քւգ.աT:51, அதிகாரி: இந்த உன் விடையால் அவர்கள் நிறைவடைய மாட்டார்கள் என்று நான் உனக்கு உறுதி கூறுகிறேன். சிம்சோன்: வாள் வீச்சாளர்களும், களரி ஆட்டக்காரர் களும், மல்லர்களும், குதிரை வல்லுனர்களும், வெற்றி வீரர் களும், மாறுவேட ஆட்டக்காரர்களும், கூத்தாகளும், கொம்மாளிகளும், பலகுரல் மன்னர்களும், அவர்களே மகிழ்விக்க அவர்களிடம் இல்லையா? அவர்களின் மாவரைககும் எந்திரத்திலே உழைத்துச் சோர்ந்துபோன, அடிமை விலங்கை இழுத்து, இழுத்து வலுவிழந்துபோன என்னுடைய வலிமை யின் ஆற்றலகளையா அவர்கள் காண விரும்புகின்றனர்? என் பார்வையிழந்த நிலையில் அவர்களுககு நான் எப்படி வேடிக்கை காட்டமுடியும் என்று எனக்குச் சொல்? அவர் களின் ஆணையை மறுத்தால், அதை வாய்ப்பாக வைத்து என்னை மேலும் துன்புறுத்த விரும்புகின்றனரோ? அல்லது என் வேதனையில் அவர்கள் வேடிக்கைகளைக் காண விழை கின்றனரோ? எ னது திணடாட்டத்தை அ வ ர் க ள் கொண்டாட விரும்புகின்றனரோ? போய் சொல், நான் வர மாட்டேன் என்று. அதிகாரி: நீ, சொல்வதைச் சற்று எண்ணிச் சொல். இம் மொழி அவர்களைச் சினமுறுத்தும். சிம்சோன்: என்னை நினைத்துப் பார்க்கவா நீ சொல்கிருய். ஆம், நான் நன்கு நினைத்துதான் சொல்கிறேன். உடலால்