பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 103 னுடைய எல்லா உடைமைகளையும் கொடுக்க வேண்டுமா யினும் கொடுப்பேன். என் மகனைச் சிறையில் கைதியாய், அடிமையாய் வைத்துக்கொண்டு செல்வனாய் வாழ்வதை விட, என் இன மக்களிடையே ஏழையாய் வாழ்வதையே நான் விரும்புகிறேன். சிம்சோனின்றி, இவ் இடத்தை விட் டுச் செல்வதில்லை என்று தீர்மானித்துள்ளேன். குழு ஆள்: செல்வத்தைச் சேர்த்துவைப்பது தந்தையர் களின் வழக்கம். அவர்களின் இறப்பிற்குப்பின் மைந்தர் களுக்கு அது பயன்படுகின்றது. உங்களுடைய மகனுக்காய்ச் செல்வம் அனைத்தையும் இழக்க நீங்கள் தீர்மானித்து விட்டீர் கள். தங்கள் தந்தையர்களின் முதுமையில் மைந்தர்கள் அவர் களைக் காப்பது வழக்கம். இயல்பாய் முதுமையடைந்த நீங்கள், பார்வையிழப்பினுல் உங்களைவிட முதுமையாய்த் தோன்றுகின்ற உங்கள் மகனைக் காக்கிறீர்கள். மனுேவா: அவனுடைய பார்வையின்மையால் அவனைக் காப்பதற்கு நான் மிகவும் விருப்பம் கொள்வேன். வீட்டில் வைத்துக் காப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன். அவ னுடைய முடியில் ஒரு நாட்டினுடைய முழு வன்மையும் அடங்கியிருந்தது. அத்தகைய தோள்களில் சுருள் சுருளாய்த் தொங்கிய முடியிலுள்ள வல்லமையைக்கொண்டு செய்த செயல்கள் அனைத்தும் என்னைச் சிறப்புற்ச் செய்கின்றன. கடவுளின் பணியில் சில மேன்மையான செயல்களைச் செய்ய மீண்டும சிம்சோனைக் கடவுள் பயன்படுத்தக்கூடாதா என்று ஏங்குகிறேன். கடவுள் அவனுக்கு இழந்துபோன ஆற்றலை மீண்டும் பெற ஒருபோதும் ஒப்புதல் தரமாட்டார். அந்த வல்லமையைக் கொடுப்பதனால் அவனைக் கடவுள் வீளுய் மடியன்போல் செயலிழந்திருக்கச் செய்யமாட்டார். சிம் சோன் தன் பார்வையையும் பலத்தையும் இழந்தாலும், கடவுள் அவனுடைய ஆற்றலை மட்டும் மீளவும் கொடுக்கிருர், எனவே மீண்டும் பார்வையைக் கடவுள் அவனுக்குக் கொடுக்கலாம். குழு ஆள்: உம் மகனின் விடுதலைபற்றிய உமது நம்பிக் ைக க ள் அடிப்படையற்றதாகவோ பயனற்றதாகவோ