பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மாமல்லன் சிம்சோன் னுக்கும் அத்தகைய விருப்பம் இருந்தது இயற்கையே. தந்தையும் தமது குறுகிய வருவாயிடையேயும் இதற்கான செலவை மனமார அவருக்குத் தந்தனர். உயர்தனிச் செம்மொழியாகிய இலத்தீனம், தற்காலத் தாய்மொழிகளுள் முதற்படியிலுள்ள இத்தாலியம் ஆகிய இவ்விரு மொழிகளிலுமுள்ள இலக்கிய வெள்ளத்தை அள்ளிப் பருகிய மில்ட்டனுக்கு இத்தாலி நாட்டின் பெருநகரங்களான செனுேவா, லெக்கார்ன், பீசா, ஃபிளாரன்சு, உரோம், வெனிசு முதலியவை வெறும் நகரங்களாக அல்லாமல் விர்கில், ஒரேசு, சுவனல், தந்தே, பெட்ரார்க்கு முதலி யோரின் நினைவூட்டுகளாகவே விளங்கின. வாணஇயல் வல்லுநரான கலீலியோவையும், டச்சு நாட்டிலுள்ள கிரோட்டியசு என்று பேர்போன வரலாற்ருசிரியரையும் மில்ட்டன் கண்டது இப்பயணத்தின் போதேயாகும். மில்ட்டன் இத்தாலி நாட்டிலிருக்கும்போது இங்கிலாந் தில் அரசரது முடியரசுக்கு எதிராகப் பாராளுமன்றத் துரிமையாளர் போர் தொடங்கினர் என்பது கேட்டார். மில்ட்டன் பாராளுமன்றத்தின் மிக முற்போக்கான கட்சித் தலைவரான கிராம்வெலின் நண்பர். எனவே அப் போரில் பங்குகொள்ளவேண்டுமென விரைந்து தாய்நாடு வந்தார். ஆளுல் இவர் படைப்போருள் என்றும் கலந்ததாகத் தெரிய வில்லை. அவர்தம் கட்சிக்குச் செய்த துணையெல்லாம் கலைப் போரும் சொற்போருமே. 3. அரசியல் வாழ்வும் உரைநடை நூல்களும் 1640 முதல் 1660 வரை இருபதாண்டுகளாக மில்ட்டன் காவியத் தெய்வத்திற்குத் தற்காலிகமாக வணக்கம் செய்து விட்டு அரசியல் துறையிலேயே ஆழ்ந்து ஈடுபட்டுச் சொற் போர்த்தாள்களும், உரை நூல்களுமே எழுதுவாராயினர். இத்தகைய சிறு நூல்கள் இருபத்தைந்து வரை உள. அவற்றுள் சில அவர் பெயர் தாங்கின. சில புனைபெயரும், சில மறைபெயரும் தாங்கின. இவற்றுள் தலைமை வாய்ந்தது, அரியோயகிட்டிகா என்பது. இது பேச்சுரிமை பற்றி