பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் வரலாறு 9. செய்தி ஆகும். இதுபற்றி அவர் மனமுளைந்ததேயில்லை. இதற்குக் காரணம் அவருக்கிருந்த மாரு இறைவன் பற்றே யாகும். இறைவன் கொடுத்த கொடை: இறைவன் எடுத்த னர் என அவர் இதனை விடுத்தனர். தமது இறைபணி இதல்ை குறைந்துவிடுமோ என்றுமட்டும் அவர் அஞ்சினர். அவ்வகையிலும் அவருடைய பற்றும் ஊக்கமும் அவருக்கு உதவி அவர் ஒப்புயர்வற்ற வெற்றி பெறும்படி செய்தன. தமது கண்ளுெளி போனதுபற்றி அவர் எழுதிய 14 அடி யுள்ள தொடர்ப்பா (Sonnet) கவியழகிற்கும், கருத்துயர் விற்கும் பேர்போனது. படியில் வாழ்வினில் பகுதிசென் றிடுவதன் முன்னர் அடியன் இன்னெளி இழந்தனன்: அகத்துள்ஒர் ஆற்றல் குடியிருந்தது; மறைப்பதற் கரியது; கோதில் அடிகட் கேபணி புரிந்திட அமைந்ததிங்கு; இதல்ை முடிவு நாள்,அவன் மனங்கொள முனைந்திடல் கண்டும் :படிவ ழங்குறு பண்ணவன் பகலொளி மறுத்தல் கடவ தோ’ எனக் கருத்துறக் கொடுகலங் குள்ளத் தடத்து வான் பொறை எழுந்தவன் தண்ணருள் காட்டும்: பேறெ லாம்தரும் பெற்றியன்: பிறரிடம் வேண்டும் ஆறி லான்;அவன் ஆணையைத் தாங்குதல் அறனே; மாறில் மாமுடி மன்னவர் வீறினன்; மனக்கோள் தேறின், நானிலம் ஏழ்கடல் தேவரும் கடப்பர்; ஈறி லான்குறிப் பறிந்திடக் காத்துதிற் பதுவும், வேறில்:முன்னவர் மெய்ப்பணிக் கினையெனக் கொளலே!’ When I consider how my fight is spent Ere half my days in this dark world and wide, And that one talent which his death to hide Lodged with me useless though my soul more bent To serve therewith my Maker and present My true account, lest He returning chide; “Doth god exact day-labour, light denied?” I fondly ask;-But Patience, to prevent That murmur, soon replies; “God doth not need