பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டனின் படைப்புகள்: வரலாற்றுப் பின்னணி 33 "சிசிலிக்கும் கிரீசுக்கும் நான் செல்ல விரும்பினே ஞயினும், உள்நாட்டுப் போரைப்பற்றி இங்கிலாந்தி லிருந்து வந்த செய்திகள் என்னை அழைத்தன. என் சக மக்கள் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது என் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக மகிழ்ச்சி யோடு வெளியூர்களைச் சுற்றிப் பார்ப்பது இழிவு என்று எண்ணித் தாயகம மீண்டேன்." மில்ட்டன் இங்கிலாந்துக்குத் திரும்பியதும் நாடாளு மன்றத்தினரோடு தம்மை நெருக்கமாகப் பிணைத்துக் கொண் டார். முன்னர் குறித்தவாறு ஆங்கிலிகத் திருச்சபையை நாடாளுமன்றத்தினர் எதிர்த்தனர். அதில் ஊழல்களும் இழிவுகளும் மிகுந்திருந்தின என்று அவர்கள் இடித்துரைத் தனா. புரோகிதரையும பூசாரியரையும் மில்ட்டன் வெறுத் தார். பேராய முறை கத்தோலிக்கத்தின் எச்சம் என்று எடுத்துக்கூறி, அதை எதிர்த்து மூன்று துண்டறிக்கைகளே எழுதி வெளியிட்டார். இவ் அமைப்பு கிறித்துவத்துக்கே எதிரானது என்றும் தக்க சமயச் சான்றுகளைக் காட்டி வாதிட்டார். இத துண்டு வெளியீடுகளில் மட்டுமல்லாமல் தமது இறுதிப் படைபபாக்கமான மாமல்லன் சிம்சோனி' லும் பெலித்தியப் பூசாரிகளை மில்ட்டன் கடுமையாகத் தாக்குகிரு.ர். (இதற்கு விவிலியத்தில் சான்றில்லை என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.) 1643இல் மேரி என்பாரை மில்ட்டன் மணந்தார். மேரி யின் குடும்பம் வேத்தியலாரை ஆதரித்தது. தொடக்கத்தி லிருந்தே மணவாழ்ககை சரிவர அமையவில்லை. திருமணம் நிகழ்ந்த ஒரு திங்களுக்குள்ளாகவே மில்ட்டனவிட்டு மேரி விலகிச் சென்ருர். மணமுறிவு குறித்த அவர் எண்ணங்கள் செழுமைபெற இச் சூழல் தோதாக அமைந்தது. அக் காலத் தில் எளிதில் மணமுறிவு பெறமுடியாது என்பதோடு, மண முறிவை ஆதரித்துப் பேசுவதற்கே மிகுந்த துணிச்சல் வேண்டும். மில்ட்டன் மிகுந்த மனத் துணிவோடு மணமுறிவுக் கென வாதாடினர். மணமுறிவுக்கான தடை கிறித்தவம் அளிக்கும் விடுதலைக்கும் உரிமைக்கும் எதிரானது என்று தக்க 2