பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. மாமல்லன் சிம்சோன் இறையியல் சான்றுகளோடு நிறுவிச் சிறு நூல் ஒன்றை எழுதினர். மில்ட்டன் ஒழுக்கக்கேட்டுக்கு வழி சமைக்கிருர் என அவர்தம் எதிரிகள் வசைபாடினர். ஒவ்வொரு கிறித்த வனும் தன் மனச்சான்றுக்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ள வேண்டிய கடமைக்கும் உரிமைக்கும் இத் தடை எதிரானது என்று மறுப்புரைகளை மில்ட்டன் வெளியிட்டார். மண முறிவுக்கு ஆதரவாக அவர் எழுதிய சிறு நூலின் மறு பதிப்பை நாடாளுமன்றத்துக்குக் காணிக்கை ஆக்கினர் என்பது இங்கு மனங்கொள்ள வேண்டிய செய்தியாகும். தம் மனைவி மேரி மனம்மாறித் திரும்பியபோது மில்ட்டன் அவரை ஏற்றுக்கொண்டார். அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஓர் ஆண் மகவும் பிறந்தனவெனினும் மணவாழ்க்கையில் சிறிதும் மகிழ்ச்சி ஏற்படவில்லை. மில்ட்டன் மன அமைதியை இழந்ததோடு, தம் மாமனரின் குடும்பச்சுமையையும் ஏற்க வேண்டியவரானர். மணமுறி வுக்கு ஆதரவாக வாதாடியதற்குத் தன்னலம் காரணமன்று என்பது இதிலிருந்து தெளிவாகப் புலப்படுகிறது. மணமுறிவுக்கு மட்டுமின்றிக் கருத்துரிமைக்கும் வெளி யீட்டுரிமைக்கும் பெருந்தடைகள் இருந்தன. புதிய கருத்து களும், புரட்சி எண்ணங்களும், குடியாட்சிச் சிந்தனைகளும் அபசாரமானவை என்றும், தெய்வநிந்தனையானவை என்றும் குற்றஞ்சுமத்தப்பட்டு ஒடுக்கப்பட்டன. தம் எண்ணங்களை அச்சமின்றி வெளியிட்டோர் தலையை இழந்தனர்; செவி யறுக்கப்பட்டனர்; சிறையில் அடைக்கப்பட்டனர். முதலாம் சார்லசின் காலத்தில் இக் கொடுமைகள் உச்சத்தை எட்டி யிருந்தன. இந்தச் சூழலில் கருத்துரிமைக்காக மில்ட்டன் குரல் கொடுத்தார். அனுமதி பெற்றபின்னரே நூல்களை வெளியிடவேண்டும் என்றிருந்த முறையைக் கடுமையாகச் சாடி, ஏரியோபகாதிகா' எனும் துண்டு வெளியீட்டை எழுதினர். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை எங்கிருக்கிறதோ, அங்கு விவாதங்களும் கருத்துமோதல் களும் இருந்தே தீரும் என்று தெளிவாக எடுத்துரைத்து, அறிவு வளர்ச்சிக்கு வெளியீட்டுரிமை இன்றியமையாதது