பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மாமல்லன் சிம்சோன் களையும், செயல்களையும் பெலித்தியர்களிடம் வெளியிட்டு, அவர்கள் என்னை எள்ளலாய்க் குத்தலாய்ப் பேசவும் செய்து விட்டாய். உன்னிடம் அடிமைபோல் வாழ்வதைவிட, இச் சிறை வாழ்வை உரிமை வாழ்வாய்க் கருதுகிறேன். உனது இல்லத்தில் இனி அடியெடுத்து வைக்கமாட்டேன். தீலியாள்: உங்கள் அருகில் வரவும், கைகளைத் தொடவும் வாய்ப்பளியுங்கள். சிம்சோன்; உன் உயிரின்மீது உனக்கு அக்கறையிருந் தால், என்னை நெருங்காதே! எனக்கு நீ இழைத்த கொடுமை களின் நினைவு என் சீற்றததைத் திடீரென்று கிளறினால், உன்னைத் தும்பு தும்பாய்க் கிழித்தெறிந்துவிடுவேன். என்னை விட்டு விலகி நிற்கும்வரை உன் குற்றங்களை நான் மன்னிப் பேன். இந்த மன்னிப்போடு, என்னைவிட்டு விலகிப்போ. மதப்பற்றினல் நீ இழைத்த வஞ்சகச் செயலை நினைத்து வருந்து. அது உன் பெயரை நல்ல மனைவியர் பட்டியலிலே சேர்க்கும். கணவனைக் காட்டிக்கொடுத்த இழிசெயலால வாழ்வின் தொடக்கத்திலேயே நீ கைம்மை யாக்கப்பட்டாய். உனது வஞ்சகச் செயலால் உனக்குக் கிடைத்த நன்மைக ளோடு, உன் கைம்மை நிலையை எண்ணி ஆறுதல் பெறு. இப்போது நீ போகலாம். விடை தருகிறேன். தீலியாள்: நீங்கள் ஆறு த ல் அடையப்போவதில்லை. காற்றும் கடலும் ஒன்ருேடொன்று மோதுவதாகத் தோன்றி டினும் அவை ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. ஆளுல் உங்களிடத்தில எனது விண்ணப்பங்கள் பயனற்றுப் போய் விட்டன. காலப்போக்கில் காற்று கடலுடனும், கடல் கரை யுடனும் இசைகின்றன. ஆனல் தாங்கள் இசைவதாய் இல்லை. உங்கள் சினம் புயல்போன்றது. அது தணிவதே இல்லை. நான் மட்டும் ஏன் என்னையே இழிவுபடுத்திக்கொள்ள வேண்டும்? இருவருக்கும் இடையே இசைவு ஏற்படுத்த முயன்று உங்களிடமிருந்து வெறுப்பைத்தவிர வேருென்றை யும் என்னல் பெறமுடியவில்லை. உங்களின் அமங்கலமான மொழிகளோடு விலகிச் செல்வதுதான், என் முயற்சியின் பயனய் எனக்குக் கிடைத்த பரிசு. உங்களுடன் பங்கேற்பதை