பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 83 நிறுத்திக்கொள்கிறேன். இனி நான் எனது செயலுக்காய் என்னை நானே ஒதுக்கித் தள்ளமாட்டேன். உரோமக் கடவுள் "செனச்சு"போல் புகழுக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒரு சமயத்தில் ஒரு நாட்டவரால் புகழப்படுகின்ற ஒரு செயல் மற்ற நாட்டவரால் இகழப்படுவது உண்டு ஒரே செயல் ஒரு பக்கத்தில் புகழ்ச்சியையும் மறு பக்கத்தில் இகழ்ச்சியையும் ஏற்படுத்துவதுண்டு புகழுககு இரண்டு இறக்கைகள் உண்டு. ஒன்று கறுப்பு. மற்ருென்று வெள்ளை. அந்த இர ண் டு சிறகுகளால் புகழென்னும் பறவை உலகெலாம் சுற்றித் திரிய முடியும். எனது பெயர் ஒருவேளை யூதேயா நாட்டில் வாழும் இசுரவேல் மக்களிடமும் எபிரேயர் களிடமும், அவர்களின் மரபினர்களிடமும் இழிவாகப் பேசப் பட்டு நான் பழிக்கப்படலாம். எனது செயல் ஒரு பற்றுள்ள மனைவி தன் கணவனுக்குச் செய்யக்கூடாத பொருத்தமற்ற செயலாகக் கருதப்பட்டு நான் பழிக்கப் படலாம். ஆனல், எனது தாய்நாட்டின் எக்ரான், காசா, அசுடாடு ஆகிய இடங்களில் எனது பெயர் புகழப்படும். இல்லற வாழ்வையே நாட்டின் நலனுக்காய் அளித்த அற்புதப் பெண்மணியாய் ஈகச்சுடராய் நான் வாழ்த்தப்படுவேன். தன் நாட்டை அழிக்க முயன்ற கொடிய அரக்கனிடமிருந்து மீட்டுத் தன் இல்லற இன்பத்தை மறந்து, நாட்டைக் காத்த உயரிய பெண்மணி என்று எனது பெயர் சிறப்பு விழாக்களிலே புகழ்ந்து பாடப் படும. எனது நாட்டு மக்கள் ஒவ்வோர் ஆண்டும் மணமுள்ள பொருள்களோடும், மலர்களோடும் என் கல்லறைக்கு வந்து என்னைச் சிறப்பிப்பர். துயிலும் சிசராவின் கோயில்களில் ஆணியறைந்த செயல் போல் நானும் புகழப்படுவேன், எனது நாட்டுப் பற்றுக்காய், எனக்குக் கொடுககப்பட்ட நன் கொடையையும், புகழையும் நுகர்வதைப் பெரிய பழியாய் எண்ணமாட்டேன். இதனை யார் வெறுத்தாலும், இதனல் யார் மானக்கேடு அடைந்தாலும், அவர்களை அவர்களின் விதிக்கு ஒப்படைத்துவிட்டு, என் விதியை ஏற்றுக் கொள்வேன். குழு ஆள்: அ வ ள் சென்றுவிட்டாள். பாம்புபோல், தன் நச்சுப் பல்லினைக் காட்டிச் சென்றுவிட்டாள்.