பக்கம்:மிஸஸ். இராதா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலைக்கு சேர்ந்தான். அவனுக்கு குழந்தை குட்டி மனைவி மக்கள் இல்லை. அவன் சூழ்நிலைகளால் துறவியானவன். கொஞ்சம் படித்திருந்தால் பாதிரியாகக் கூட ஆகி இருப்பான்.

தேவாசீர்வாதம் அதிகம் பேசமாட்டான். பல்சக்கரம் போல பணியாற்றுவான். சோறு போடும் போது சாப்பிடுவான்; பூச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவான்; அதிகாலையில் கான்வெண்ட்டைக் கூட்டிப் பெருக்குவான். வேறு விவகாரங்கள் அவனுக்குத் தெரியாது. சுருக்கமாகச் சொன்னால் பிறவியிலேயே அவன் ஒரு மாதிரியானவன்.

மஞ்சுளாவின் அறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல் திரைகள் விலகியபடி கிடந்தன.

“மஞ்சுளா!”

மஞ்சுளா மதரின் குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் போனாள்.

“நமஸ்காரம் மதர்!”

"இன்னும் ஏன் தூங்காமல் இருக்கிருய் என்று கேட்டுப் போக வந்தேன்.”

‘என்னை மன்னிக்க வேண்டும் மதர். நான் வேலையை ராஜினாமாச் செய்வதாகத் தீர்மானித்து விட்டேன்!’

‘மஞ்சுளா!’

‘உண்மைதான் மதர் என்னல் எனது தகப்பனரை விட்டுப் பிரிந்து போக முடியாது மதர். அவர் வயதானவர்.’

‘உன் மாறுதலுக்காகவா இந்த முடிவை எடுத்தாய்?’

'இந்த மாறுதல் என் வாழ்க்கைப் பாதையையே திசை திருப்பி விட்டுவிடுமோ என்ற பயம்தான் மதர் எனது இந்த முடிவுக்குக் காரணம்!”

பிரஞ்சு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, பப்ளி மாஸ் பழத்தைப்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்த மதருக்கு கோபத்தால் முகம் ரத்தம் சுண்டியது போலாகி விட்டது.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/29&oldid=1549404" இலிருந்து மீள்விக்கப்பட்டது