பக்கம்:மிஸஸ். இராதா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிஸ்டரின் பேச்சு மஞ்சுளாவிற்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதை அவளால் வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதெல்லாம் பெண்கள் விஷயத்தில் உண்மையல்ல. பெண்கள் இமய மலையையே இதயத்தில் ஒளித்துவைத்துக்கொண்டு சிரித்துக்கொண் டிருக்கும் திறமைசாலிகள். அதே நேரத்தில் மற்றவர்களின் சின்ன விஷயத்திற்குக்கூட அவர்கள் உள்ளத்தில் இடம் கிடைக்காது; அப்படியே வெளியே கக்கி விடுவார்கள். மஞ்சுளாவும் அப்படித் தான்.

பைபிள், ஜபமாலை போன்ற மதக்குறிகள் மட்டும் அரசோச்சிக் கொண்டிருந்த குவார்ட்டர்சில் வாழ்ந்து கொண்டு எவ்வளவு பெரிய ரகசியத்தை அடக்கி வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிருள்!

அன்றிரவு மஞ்சுளா தூங்கவே இல்லை. ஏனெனில் அவளுடைய எதிர் காலத்தைக் கணித்த இரவு, அந்த இரவு தான். மனிதவாழ்க்கையில் அவர்கள் ஒரேஒரு கணத்தில் தீர்மானிக்கும் முடிவுகள் தான் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. நெப்போலியன் காலத்திலிருந்து இன்றுவரை இந்தத் தத்துவம் சிரஞ்சீவியாக இருந்து வருகிறது. மஞ்சுளா மட்டும் தப்ப முடியுமா?

அன்று இரவு!

ஆடி முடிந்த நாடகக் கொட்டகையைப்போல் அந்தக் கன்னியர் மாடம் நிசப்தமாக இருந்தது. விடியற்காலம் மலர இருக்கும் மலர்கள் தங்கள் இதழ்களை விரிக்க நாழிகை பார்த்துக் கொண்டிருந்தன. பூச்செடிகளைப் பனிப் போர்வைகள் அமுக்கிக் கொண்டிருந்தன.

அந்தக் கன்னியர் மாடத்தில் மஞ்சுளாவைப்போல் வேலைக்குச்சேர்ந்த தோட்டக்காரன் தேவாசீர்வாதம் லொக்கு லொக்கு என்று இருமிக்கொண்டு கிடந்தான். அவன் ஒரு அரசாங்க அலுவலகத்தில் பியூன் வேலை பார்த்து ஒய்வு பெற்றவன். சோறு கிடைத்தால் போதும் என்று அருள் மலர் கான்வெண்ட்டில்

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/28&oldid=1545197" இலிருந்து மீள்விக்கப்பட்டது