பக்கம்:மிஸஸ். இராதா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று மஞ்சுளா அறிந்ததுதான்! ஆனால், பொன் வேண்டாம், பூ வேண்டாம், பொட்டு வேண்டாம்—என்று பெண்மையின் சின்னங்களையெல்லாம் தியாகம் செய்த சிஸ்டர்களுக்குக்கூட வயிற்றெரிச்சலும், பொறாமையும் இருக்கும் என்று அவள் எப்படி எதிர்பார்க்க முடியும்!

ஒரு நாள் மஞ்சுளாவுக்கு பாண்டிச்சேரி மிஷன் மேற்றாணி யாரிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது. மஞ்சுளா, அப்படி ஒரு உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அருள்மலர் கான்வெண்ட்டில் கிடைத்த ஆசிரியை வேலையை அவள் தற்காலிக மானதாகத்தான் கருதியிருந்தாள். ஆனால் மிஷன் அப்படி நினைக்கவில்லை. அவள் திருமணம் செய்துகொள்ளும் வரை அவளை நிரந்தர ஆசிரியையாக நியமனம் செய்து உடனடியாக அவளுக்கு ஒரு மாறுதல் உத்தரவையும் மேற்றாணியார் போட்டிருந்தார். அந்த உத்தரவின்படி மஞ்சுளா பாண்டிச்சேரி தலைமை அலுவலகத்தில் பணியாற்றவேண்டும்.

மாறுதல் உத்தரவைப் பெற்றதும் மஞ்சுளாவிற்கு மனம் குழம்பியது. திருமணமாகும் வரை மேற்றாணியாரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் வேலையைவிட்டு விலகிவிட வேண்டுமாம்—இதில் மஞ்சுளா ஏதாவது ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.

"மஞ்சுளா!”
“சிஸ்டார்!”

“பாண்டிச்சேரிக்குப் போவதைப் பற்றி முடிவு செய்து விட்டாயா?”

“இன்னும் இல்லை சிஸ்டர். இன்னும் இரண்டு தினங்களில் முடிவு செய்துவிடுவேன். பிறகு என் விருப்பத்தைச் சொல்லுகிறேன்.”

"மஞ்சுளா, எங்களுக்கெல்லாம் மேற்றாணியார் உத்தரவு கடவுளின் ஆணை மாதிரி. நீ இன்னும் மதத்தில் சேராததால் உனக்கு அதன் மகிமை தெரியவில்லை. உண்மைதான் மஞ்சுளா!

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/27&oldid=1549403" இலிருந்து மீள்விக்கப்பட்டது