பக்கம்:மிஸஸ். இராதா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நானும் மாறவேண்டுமா என்ன!—இப்படித்தான் அவள் அந்தக் கன்னிமாடத்து மதரைப் பற்றியும், சிஸ்டர்களைப் பற்றியும் முடிவு செய்திருந்தாள்.

உலகத்தில் மனித மனத்தின் சில முடிவுகள் எடுத்த எடுப்பில் தோன்றுபவை உண்மையாகி விடுகின்றன; பல முடிவுகள் எடுத்த எடுப்பில் தோன்றுபவை தவறானதாகவே முடிந்திருக்கின்றன. மிஸ் மஞ்சுளாவிற்கும் மதர்களைப்பற்றியும் சிஸ்டர்களைப் பற்றியும் எழுந்த எண்ணம், அவளுடைய பருவத்திற் கும், தோற்றத்திற்கும் தொடர்புடையவை.

மாலை நேரங்களில் மல்லிகைப் பூவையும், ஒய்வு நேரங்களில் ‘நேயர்விருப்பம்’ கேட்பதற்கு “டிரான்சிஸ்டரை”யும் தேடும் மிஸ் மஞ்சுளாவிற்கு எப்படித் துறவு வாழ்க்கை பிடிக்கும்? இந்த ஆசைகளை யெல்லாம்--சுவையான உணவுக்காகவும், வறுமையற்ற வாழ்க்கைக்காகவும் தியாகம் செய்துவிட முடியுமா? ஆம்; தியாகமும், ஆசையையும் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்யும் வாகனங்கள், காலம் இடைவெளியை பெருக்குமே தவிர ஒரு போதும் சுருக்காது.

“மஞ்சுளா!”
“சிஸ்டர்!”

“இன்று எக்ஸ்கர்ஷன் இருக்கிறது, குழந்தைகளை Lவுனுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டுத் திரும்ப வேண்டும்!”


மஞ்சுளாவின் பதிலில் ஒரு கவர்ச்சி இருக்கும். அழகான பெண்களுக்குக் குரலும் இனிமையானதாக அமைந்துவிட்டால் அவர்களின் அழகு தினம் தினம் மெருகு ஏறுவதுபோல் பார்ப்பவர்களுக்குத் தெரிகிறது. அதனல்தான் அருள் மலர் கான்வெண்ட்டில் மிஸ் மஞ்சுளா ஒரு தேவதைபோல விளங்கினாள்.

ஆனால் அந்த அழகே அவளுக்கு எதிரியாக வரும் என்று. அவள் எதிர்பார்த்திருக்க முடியுமா? எதிர்பாராததெல்லாம் நடப்பது தானே வாழ்க்கை! பெண்களுக்குப் பொறாமை உண்டு

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/26&oldid=1549401" இலிருந்து மீள்விக்கப்பட்டது