பக்கம்:மிஸஸ். இராதா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் அந்தக் கான்வெண்ட்டில் மிஸ் ஆனதும், மதர் சுப்பீரியர் அவளுக்கு ஒரு உத்தரவு போட்டார்கள்—மஞ்சுளா, இனிமேல் வீட்டுக்குப்போக முடியாது. மதரோடும் சிஸ்டர்களோடும் குவார்ட்டர்சில் தான் தங்கவேண்டும். — இதுதான் மதர் கொடுத்த உத்தரவின் சாரம்.

இந்த உத்தரவு, மஞ்சுளாவுக்கு ஒரு வகையில் மனதுக்கு இதமாகத்தான் தெரிந்தது. வேளா வேளைக்கு உணவு, கட்டுப்பாடான வாழ்க்கை, பிறரிடம் அன்போடு பழக வேண்டும்; பேச வேண்டும் என்ற மனப் பயிற்சி; இவைகளுக்கெல்லாம் மேலாக மலர்களைப் போன்ற பிள்ளைகளுக்கு எழுத்து அறிவிக்கும் புனிதத்தொழில் — இந்தக் காரணங்கள் அவளை குவார்ட்டர்சில் வாழ்க்கை நடத்துவதற்கு உற்சாகத்தை வழங்கின.

மஞ்சுளா பி. ஏ. படித்தவள், வாடாத மலரைப்போல் எப்போதும் அவள் முகம் மலர்ச்சியாக இருக்கும். அவள் கருப்புமல்ல, வெரிப்பான சிவப்புமல்ல; மான் நிறம். ஆண்களைப் போல் உயரமானவளுமல்ல; சில பெண்களைப்போல் குள்ளமானவளுமல்ல. “அவள் அழகானவள், கவர்ச்சி மிக்கவள்; வசீகரிக்கும் சக்தியுள்ளவள்" என்று பார்ப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அவள் எடுப்பாக இருந்தாள்.

மஞ்சுளா இனிமையாகப் பாடுவாள். குயிலின் குரல் அவளுடையது. மஞ்சுளா சங்கீதம் பயின்றிருந்தால், அவள் ஒரு இசை வாணியாக இருப்பாள். அவளுடைய மென்மையான நடவடிக்கைகளும், இனிமையான குரலும் மதர், சிஸ்டர்கள் மத்தியில் அவளுக்கு ஒரு தனி மதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

“மஞ்சுளாவை ஏன் நம் மதத்தில் சேர்த்துவிடக்கூடாது? சேர்த்துவிட்டால் வெகு விரைவில் ‘மதர்’ ஆகிவிடுவாள்” என்று பலமுறை மதரும் சிஸ்டர்களும் பேசிக்கொண்டிருந்ததை மஞ்சுளா கேட்டிருக்கிருள்.

"நான் ஏன் மதராக வேண்டும்? வாழ்க்கையில் இளமையிலேயே வெறுப்படைந்தவர்களும், வறுமையால் பாதிக்கப் பட்டவர்களும் காதலில் தோல்வி கண்டவர்களும் தான் மதத்தை மாற்றிக்கொண்டு அடையாளம் தெரியாமல்

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/25&oldid=1549398" இலிருந்து மீள்விக்கப்பட்டது