பக்கம்:மிஸஸ். இராதா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



“நீ ஊருக்குப் போகப் போறீயாமே?”

“இல்லை; நான் வீட்டுக்குப் போகப் போறேன் தேவு!”

அவசரப்படாதே; ஒருவேளை உன்னுடைய மாறுதல் ரத்தானாலும் ஆகலாம்; ராத்திரி பெரியம்மா பேச்சிலே இருந்து தெரியுது மஞ்சு!”

"இப்ப ரத்துப் பண்ணுவாங்க. பிறகு ஒரு நாளைக்கு கோவாவுக்குப்போ என்பாங்க! அதுனாலே நிரந்தரமா ஏதாவது முடிவு எடுக்கணும். அது தான் வேலையை விட்டுப்போற முடிவு!”

"அவசரப்பட்டு வேலையை விட்டுடாதே! ரஞ்சிதமான சாப பாடு; கச்சிதமான படுக்கை வசதி--இதுக்கு மேலே உனக்கு என்ன வேணுமாம்!”

“வாழ்க்கை என்பது வயிற்றிலேயா இருக்குது; மன நிம்மதியிலே தானே இருக்குது!”

"அப்ப...வசதிகளைவிட, சம்பளத்தைவிட உனக்கு வேறு என்னமோ இருக்குது போலே இருக்கு. இல்லையா மஞ்சு!”

"எனக்கு மட்டுமில்லே! எல்லார் வாழ்க்கையிலும் ஒரு குறிக்கோள் இருக்கும். அது இல்லாட்டா அது என்ன வாழ்க்கை? போடுறதை சாப்பிட்டுட்டு பூதம் மாதிரி கிடக்கிற அல்சேஷன் நாய்க்கும் மனிதனுக்குமே பிறகு என்ன வித்தியாசம்!”

"அடேயப்பா! ஒரு நாள் கூட நீ இப்படிப் பேசினதில்லையே மஞ்சு! இன்னிக்கி நீ இவ்வளவு பேசிட்டியே!”

"நான் ஒன்றும் வித்தியாசமா பேசிடல்லையே தேவு! எனக்கு இப்ப மனந்திறந்து பேசுறதுக்கு உன்னைத் தவிர வேறு யாருமே இல்லை. அதனுலேதான் அள்ளிக்கொட்டினேன். எல்லாருடைய உள்ளத்திலேயும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. அதை பயன்படுத்துறதைப் பொருத்து இருக்கு. தென்ன மரத்திலே தான் இளநீர் கிடைக்குது! அதே தென்ன மரத்திலேதானே மதியைக் கெடுக்கும் கள்ளும் கிடைக்குது! அது மாதிரிதான் மனிதனின் உள்ளமும்!"

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/31&oldid=1549819" இலிருந்து மீள்விக்கப்பட்டது