பக்கம்:மிஸஸ். இராதா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மஞ்சு! நீ ஏதோ மனம் குழம்பிப்போயிருக்கே! நான் பேசிக்கிட்டேயிருந்தா நீ புலம்பிக்கிட்டே இருப்பே, அதனுலே நானே பேச்சை நிறுத்திக்கிறேன்.”

“இல்லை தேவு, மதரும் சிஸ்டர்களும் திரும்பும் வரை நீ தாராளமாகப் பேசிக்கிட்டேயிருக்கலாம். அல்லது பள்ளிக்கூடம் துவங்குகிற வரைக்கும் பேசலாம். அப்புறம் பாமினி வந்துவிடுவாள். பிறகு எனக்கு ஒரு முடிவு தெரிந்துவிடும்!”

"மஞ்சு! எந்தப் பாமினி.”

"அதுதான் நம்ம ஸ்கூலிலே எல். கே. ஜி. படிக்குதே ஒரு பொண்ணு. தினசரி ஒரு பச்சைக் காரிலே வரும்ல; அந்தக் குழந் தையைத்தான் சொல்றேன்!”

"அது யாரு மஞ்சு பெரிய பணக்கார வீட்டுக் குழந்தையோ?”

“இல்லை; எல்லோரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது சாதாரண வீட்டுக் குழந்தை. அந்தக் குழந்தையின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு பணக்காரர் இருக்கிறார். அவர், அவரது நூற்பாலைக்குப் போகும்போது தினசரி இந்தக் குழந்தையை தனது காரில் இங்கு கொண்டுவந்து இறக்கி விட்டு விட்டுப் போகிறார்!”

"பாவம், அவருக்கு குழந்தை இல்லை போலே இருக்கு!”

"சை! அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே! பெரிய பணக்காரர். வீட்டுக்கு ஒரே பிள்ளை. பெரிய நூற்பாலை. எல்லாம் அவருக்குத்தான்.”

"அவருக்கென்று யாரோ பாக்கியவதி பிறந்திருப்பாள் இல்லையாமஞ்சு?’ என்று சொல்லிக் கொண்டே தேவாசீர்வாதம் கடைக்கண்ணால் மஞ்சுளாவைப் பார்த்தான். மஞ்சுளா தேவாசீர்வாதத்தைக் கவனிக்காமல் பள்ளிக்கட வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அந்தப் பச்சைக்கார் பாமினியை இறக்கி

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/32&oldid=1549820" இலிருந்து மீள்விக்கப்பட்டது