பக்கம்:மிஸஸ். இராதா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"இந்த நேரத்தில் எங்கே கீதா போயிட்டு வருகிறாய்?”

"வேறு எங்கும் நான் போகவில்லை. பாத்ரூமுக்குத்தான் போய் விட்டு வருகிறேன்?"

"சரி சரி, படு குளிர் அதிகமாக இருக்கிறது. கம்பளியைப் போட்டு மூடிக்கொள்."

கீதா எதுவும் பேசாமல் விளக்கை அணைத்துவிட்டு படுத்துக் கொண்டாள்.

கீதாவுக்குத் தூக்கம் வரவில்லை. தாலி கட்டும் நேரத்தை எதிர் நோக்கியிருக்கும் மணப் பெண்ணைப்போல, கீதா சூரியோதயத்தை ஆவலோடு எதிர்பார்துக் கிடந்தாள். அவளுடைய உள்ளத்தில், சுயநலத்திற்கும், நியாயத்திற்குமிடையே பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்தது. குருவிகளின் சலசலப்பும், மொட்டவிழும் புதுமலர்களின் நறுமணமும், பொழுது விடியப் போகிறது என்பதை விரித்துக் காட்டினாலும் கீதா மனக் குழப்பத்திலேயே சவாரி செய்து கொண்டிருந்தாள்.

“என்ன இருந்தாலும் அவர் என் புருஷன்! அவரை நான் காட்டிக் கொடுக்க முடியுமா?"

“அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையையே அழித்து விட்டு, இங்கும் வந்து அவளைத் துரத்த நினைப்பதா?”

"குற்றம் அவர் மீது இல்லை! அவள் அப்போது குஷ்டரோகியாக இருந்தாள், அதனால் விவாகரத்து செய்தார்!"

“சரி முடிந்து விட்டது; அதோடு விட்டு விடுவதுதானே நியாயம்! அவளுக்கு வியாதி என்று தானே ஆனந்த் அவளைக் கைகழுவினர்!”

“இப்போது அவளுக்கு வியாதி தீர்ந்து விட்டது என்று தெரிந்துவிட்டால் அவர்மனம் மீண்டும் அவள் பக்கம் திரும்பாது என்பது என்ன நிச்சயம்?”

"நீ அவளுக்காக எவ்வளவு வாதாடியிருக்கிறாய்? அவளை

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/74&oldid=1545614" இலிருந்து மீள்விக்கப்பட்டது