பக்கம்:மிஸஸ். இராதா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"இல்லை, நீங்கள்தான் தர்மத்தோடு மோதிக் கொண்டிருக்கிறீர்கள்!"

"நீ என்ன தர்மதேவதை என்ற நினைப்பா?"

"சட்டம் உங்கள் கையில் இருந்தால் தர்மம் என்கையில்தான் இருக்கும். சட்டமும் தர்மமும் ஒத்துப் போனதாகச் சரித்திரம் இல்லை!”

"வம்பை விலைக்கு வாங்காதே! உனக்கு உயிரோடு போய் விட விருப்பமிருந்தால் உனக்கு ஒரே ஒரு நாள் அவகாசம் கொடுக்கிறேன். நாளைக்கு இரவு இந்த அறையில் நீ இருக்கவே கூடாது' என்று கடுப்பாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அறைக்கு வெளியே 'சரக்' என்று ஒரு ஓசை கேட்டது. அது ராதாவின் காதில் விழுந்ததும் அவள் துடித்துப்போய் தலையைக் குனிந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள். அவளுக்கு உயிரே போய்விட்டது போன்ற ஒரு திகில் ஏற்பட்டது.--யாரோ ஒரு உருவம் முக்காடு போட்டபடி வேகமாக மறைந்து கொண்டே சென்றது.

"ஆனந்த் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள்!” என்று திரும்பிப் பார்த்தாள். ஆனந்த் அந்த இடத்தில் இல்லை.

ராதாவின் அறையை விட்டுக் கிளம்பிய ஆனந்தன் நேராக அவனுடைய படுக்கை அறைக்கு ஓடினன். அங்கே அவனுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது. படுக்கையில் கீதாவைக் காணவில்லை.

"கீதா!"

பதிலில்லை!

இந்த அகால நேரத்தில் கீதா எங்கே போயிருப்பாள்?

"கீதா! கீதா!"

கீதா, அசைந்து வரும் தேரைப்போல் வெளியிலிருந்து உள்ளே வந்தாள்.

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/73&oldid=1551112" இலிருந்து மீள்விக்கப்பட்டது