பக்கம்:மிஸஸ். இராதா.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



“என் வாழ்க்கையை அழிக்க வந்திருப்பவள் நீ தான், உன்னை அந்த அளவிற்கு விட்டுவிட மாட்டேன், உன் சாவில்தான் என் எதிர்காலம் இருக்குமானல் நான் கொலைகாரன் ஆவதைத் தான் பெரிதும் விரும்புவேன். எந்தச் சட்டமும் என்னை அண்ட முடியாது!’

“என்னைக் கொல்வதற்கு எந்த ஆயுதமும் உங்களுக்குத் தேவைப்படாது. இதற்கு முன் தேவைப் பட்டதுமில்லை. என் உயிரை நான்தான் என் கையில் வைத்துக் கொண்டிருக்கிறேன். சாவதாக இருந்தால் என் கழுத்திலிருந்த தாலியை நீங்கள் அறுத்த அன்றே மாய்த்துக் கொண்டிருப்பேன்!”

"வேறொரு பெண்ணாக இருந்தால் அப்படித்தான் செத்திருப்பாள்! உன்னைப்போல் மோப்பம் பிடித்துக் கொண்டு அலைந்து திரிய மாட்டாள்!”

"மிஸ்டர் ஆனந்த்! நீங்கள் மிதமிஞ்சிப் பேசுகிறீர்கள்; இதமாகச் சொன்னால் உங்களுக்குப் புரியாது, குளத்தில் விழுந்து சாகப் போகிறவர்கள் யாரைப் பற்றி இழுத்தாலும் அவர்களும் மூழ்கி விடுவார்கள் என்பார்கள். அது மாதிரித் தான் நீங்கள் சிக்கிக்கொள்ளப் போகிறீர்கள். நீங்கள் இப்போது என்னுடைய அறையில் இருக்கிறீர்கள். நான் கூச்சல் போட்டால் நீங்கள் தான் சிக்கிக் கொள்வீர்கள், விசாரணை இல்லாமலே நீங்கள் குற்றவாளி ஆகிவிடுவீர்கள். முன் யோசனை இல்லாமல் வந்து விட்டீர்கள். தயவு செய்து போய் விடுங்கள்!” என்று ராதா சொன்னது ஆனந்தனின் உள்ளத்தில் சுருக்கென்று தைத்தது. இருந்தாலும் அவனுடைய ஜபர்தஸ்து குறையவில்லை.

“இப்படி மிரட்டத் திட்டம் போடுகிறாயா? என் மீது பழி போட உன்னாலும் முடியாது, உன்னைப் படைத்த கடவுளாலும் முடியாது!"

"பாவம் கடவுள்! அவரை ஏன் திட்டுகிறீர்கள். இந்த விவகாரத்திற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை”

“ராதா, நீ.பாம்போடு விளையாடுகிருய்;"

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/72&oldid=1551111" இலிருந்து மீள்விக்கப்பட்டது