பக்கம்:மிஸஸ். இராதா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"உனக்குத் தெரிந்து விட்டது என்று எனக்கும் தெரியும்"

"ராதா?"

"உன் கேள்விக்கு நான் பதில் சொன்னேன். சில நேரங்களில் மௌனம் நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கி விடுகிறதே, அதற்காக!”

"உன்னிடம் நான் எந்த விளக்கமும் எதிர்பார்க்கவில்லை; நீ போகலாம்!”

"இன்னமும் உனக்கு எதற்கு விளக்கம்? எல்லாம் தான் தெரிந்திருக்குமே?”

இந்தக் கட்டத்தில் வாயில் டுத்பிரஷோடு உள்ளே நுழைந்தான் ஆனந்த்.

“ராதா, உடம்பு சரியில்லை கீதாவுக்கு இரவெல்லாம் அவள் துரங்கவில்லை. நீ, அவளை அதிகமாகப் பேசவிடாதே! தேவைப்படும் போது நான் பெல் அடிக்கிறேன்” -- ஆனந்தன் நறுக்குத் தெரித்ததுபோல் பேசினான். அவன் ஒரு நாளும் அப்படிப் பேசியது இல்லை.

அன்று மு த ல் எஸ்டேட் பங்களாவை ஒரு பனி மூட்டம் கவ்விக் கொண்டது. எல்லா நிகழ்ச்சிகளும் பழைய காலத்து ஊமைப் படத்தைப்போல பேச்சு மூச்சு இல்லாமல் நடந்து கொண்டிருந்தன. ராதாவுக்குத் தோழிபோல் இருந்த கீதா இப்போது ஒரு எசமானியைப்போல் நடந்து கொண்டாள். அதைப் போலவே தான் ராதாவும் ஒரு விசுவாசமுள்ள ஊழியரைப் போல் நடக்கத் தொடங்கினாள்.

எஸ்டேட்டை ஏதோ ஒரு உருத்தெரியாத சூன்யம் கவ்விக் கொண்டுவிட்டது போல உணர்ந்தார் சடையப்பர். ராதாவின் முகத்தில் அருள் இல்லை; அதைப்போலவேதான் கீதாவுக்கும்.

"ராதா!"

"சார்!"

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/76&oldid=1551114" இலிருந்து மீள்விக்கப்பட்டது