பக்கம்:மிஸஸ். இராதா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மற்ற சமையல் சாமான்கள் வாங்க — அனைத்துக்குமே மெர்க்காராதான் மத்திய கேந்திரம் ! அதனால் கடலை நோக்கி ஒடும் நதிகளைப்போல கார்கள் மெர்க்காரா நோக்கி ஓடிய வண்ணமே இருக்கும்.

மெர்க்காரா!

தென் இந்தியாவில் ஒரு உயரமான மலை வாசஸ்தலம். குடகு நாட்டுக்கு அதுதான் தலைநகரம். தலைநகரம் என்றவுடன் அது சென்னையைப்போல், பெங்களுரைப்போல் விஸ்தாரமாக இருக்கும் என்று நினைத்து விடவேண்டாம். தமிழ் நாட்டிலுள்ள ஒரு நகரியத்திற்கு இணையாகத்தான் சொல்லலாம். இருந்தாலும் அது ஒரு தலைநகரம்; குடகுப் பகுதியின் கலாச்சாரத்திற்கு அது தான் ஒரு அழியாத முத்திரையாக விளங்கும் பட்டணம்.

நகரம் சமதளமாக இருக்காது. சில வீதிகள் ஏற்றமாகவும், சில வீதிகள் இறக்கமாகவும்தான் இருக்கும். சுமார் பதினையாயிரம் பேர் கொண்ட அந்தச் சிறிய நகரம்தான் குடகிற்கே பெரிய வியாபார ஸ்தலமாக விளங்குகிறது. அதைவிட்டால் அறுபது மைல் கீழே இறங்கி மைசூருக்குத்தான் வரவேண்டும். மைசூருக்கு மேற்கே அவ்வளவு தூரத்தில் உயரமான குன்றின் மீது அந்த நகரம் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

மெர்க்காரா — வெள்ளிக்கிழமைகளில் திருமண வீட்டைப் போல மளமளப்பாக இருக்கும். கடைகளில் வியாபாரம் பொங்கி வழியும்; கார்களும் ஸ்கூட்டர்களும், மோட்டார் சைக்கிள்களும் இங்கும் அங்கும் இழைந்து கொண்டிருக்கும். சினிமாக் கொட்டகைகளில்கூட அன்றுதான் படங்களை மாற்றிப் போடுவார்கள். ஏனெனில் அன்றுதான் மெர்க்காராவில் வாரச்சந்தை கூடுகிறது. இதை அனுசரித்தே சுற்றியுள்ள தேயிலை, ஏலம், காப்பித் தோட்டங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளானாலும் சரி, முதலாளிகளானலும் சரி வெள் ளிக்கிழமை தான் மெர்க்காராவுக்கு வரமுடியும். மற்ற நாட்களில் எல்லோரும் அவரவர் தோட்டங்களில்தான் இருப்பார்கள்.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/8&oldid=1549374" இலிருந்து மீள்விக்கப்பட்டது