பக்கம்:மிஸஸ். இராதா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மற்ற முதலாளிகளைப்போலத்தான் சில்வர் ஸ்டார் எஸ்டேட் முதலாளி சடையப்பரும் வெள்ளிக்கிழமை தோறும் மெர்க்காராவுக்குப் போவார். ஒரு வாரத்திற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு வருவார். அவரிடம் ஒரு அம்பாசிடர்கார், ஒரு ஜீப், ஒரு டிராக்டர், இரண்டு வண்டிகள் இருந்தன. சுவையாகச் சமைப்பதற்காக செட்டி நாட்டிலிருந்து ஒரு சமையல்காரனைக் கொண்டுபோய் வைத்திருந்தார்.

மூன்று கணக்குப் பிள்ளைகள், நான்கு மேஸ்திரிகள்-இன்னும் சில நபர்கள் - இவர்களுக்கு மத்தியில் 'ராதா அம்மா' என்று அன்போடும் பரிவோடும் அழைக்கப்படும் ஒரு இளம் பெண்--இவர்கள்தான் சில்வர் ஸ்டார் எஸ்டேட்டில் பிரஜைகள்.

"ராதா!"
"சார்!"

"விடிந்தால் வெள்ளிக்கிழமை. சாமான் சிட்டைகளெல்லாம் தயாராகிவிட்டதா?" சடையப்பர் இராமனாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்தவராதலால் செட்டி நாட்டு பாணியிலேயே பேசுவார்.

"காய் கறிச்சிட்டை, சமையல் சாமான்கள் சிட்டை எல்லாம் தயாராகிவிட்டது. பெட்ரோல் விஷயம் டிரைவரைத் தான் கேட்கணும். அவன் சித்தாப்பூருக்குப் போயிருக்கிறான் வந்ததும்கேட்டுக் கொள்கிறேன்".

ராதாவின் பதிலிலிருந்து யாரும் அவளைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாது. அவள் யார்? அந்த எஸ்டேட்டில் அவளுக்கு என்ன பொறுப்பு? அவளுக்கும் சடையப்பருக்கும் என்ன சம்பந்தம்? விருந்தாளிகளுக்கும், வேற்று மனிதர்களுக்கும் இது ஒரு புதிர்தான். சரி; அங்கே வேலை பார்ப்பவர்களுக்குத் தான் ஏதாவது தெளிவாகத் தெரியுமா? சாமான்கள் வாங்குவதற்குத் தோட்டக்காரர்கள் எப்படி மெர்க்காராவுக்குப் போய்த்தான் தீரவேண்டுமோ அதைப்போலத்தான் சில்வர் ஸ்டார் எஸ்-

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/9&oldid=1549410" இலிருந்து மீள்விக்கப்பட்டது