பக்கம்:மிஸஸ். இராதா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டேட்டில் எதுவேண்டுமானலும் ராதாவைத்தான் கேட்க வேண்டும்.

ஆம்; ராதா, சில்வர்ஸ்டார் எஸ்டேட்டில் ஒரு நடமாடும் மெர்க்காரா! சமையல்காரன் அரிசிக்காக ராதாவிடம் போய் நிற்பான்; கணக்குப்பிள்ளை வாரச் செலவுக்காக ராதாவிடம் ரொக்கப்பணத்தை எதிர்பார்த்திருப்பார். சிப்பந்திகளின் சம்பளப்பட்டு வாடாவிலிருந்து, கூலிகளின் அன்றாடச் சம்பளம் வரை—எல்லாமே ராதாவின் முன்னிலையில், மேற்பார்வையில் தான் நடந்தன.

ராதா ஒரு யுவதி! ஆனால் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா, திருமணம் ஆகவில்லையா என்பது ஒருவருக்கும் விளங்காத கேள்விக் குறியாக இருந்தது.

அவளுக்கு அந்த எஸ்டேட்டின் மூலைமுடுக்கெல்லாம் தெரியும். அந்தப் பங்களாவின் எல்லா விவரங்களேயும் அவள் அறிவாள். ஆனல் அவள் உள்ளத்தில் உள்ளதை எவரும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் மனம் மட்டும் — பூமியில் உள்ள புழுதிகளையும், ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களையும், மேகத் தின் மழைத்துளிகளையும் சுமந்து கொண்டிருப்பதைப் போல் கனத்துப்போயிருந்தது. இதை மட்டும் அங்குள்ள சிப்பந்திகளால் எப்படியோ புரிந்து கொள்ள முடிந்தது!

மனிதன் — தனிமையில் இருக்கும் போதுதான் தன்னைப் பற்றி நினைக்கிறான். அதுவும், கவலைகளால் சூழப்பட்ட மனிதன், அந்தக் கவலைகளைப் பற்றி மறுபரிசீலனை செய்வதற்கே அடிக்கடி தனிமையை விரும்புவான். ராதா இந்த வகையைச் சேர்ந்தவள். ஒவ்வொரு கட்டத்திலும் அவள் தனியாத சிந்தனையிலிருந்து தான் வெடுக்கென்று தூங்கி விழித்தவளைப்போல் துள்ளிக் குதித்து வருவாள்.

அவள் அழகு எல்லோரும் அறிந்தது. அவள் குரல் எல்லோரும் கேட்டது; அவள் நடை உடை எல்லோரும் பார்த்தது. ஆனல் அவள் உள்ளம் மட்டும் எவரும் அறியாதது.

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/10&oldid=1549375" இலிருந்து மீள்விக்கப்பட்டது