பக்கம்:மிஸஸ். இராதா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறுமாத காலத்திற்குள் அந்தப் பங்களா முழுவதும் நீக்கமற நிறைந்துவிட்ட ராதாவைப்பற்றி அதே பங்களாவில் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு ஆணின் குணம் நெருங்கிப் பழகினல் சில நாட்களில் தெரிந்து விடுகிறது; ஆனால் ஒரு பெண்ணின் குணம் அப்படியல்ல! அது கடலில் தவற விட்ட கணையாழி மாதிரி! கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான காரியம்.

ராதா பாடத் தெரிந்தவள். அவள் குரல் இனிமையானது. இரவு நேரங்களில் நிலவொளியில் வாசலில் உட்கார்ந்து கொண்டு மெல்லிய குரலில் பாடுவாள், அது சோகமான பாட்டாக இருந்தாலும் இனிமையாக இருக்கும்.

ராதா அந்த எஸ்டேட்டுக்கு வந்த மறுமாதமே, சடையப்பர் அவளுக்கு உதவிக்காக தமிழ்நாட்டிலிருந்து ஒரு வேலைக்காரியையும் கொண்டு வந்து சேர்த்து வைத்தார். ஏனெனில் பத்துப்பெண்கள் மத்தியில் ஒரு ஆண் வாழமுடியும்; ஆனால் பத்து ஆண்கள் மத்தியில் ஒரு பெண் எப்படி வாழமுடியும்?--என்பதைச் சடையப்பர் உணர்ந்திருந்தார். -

சடையப்பர், தான் மட்டும் வெளியில் போவதாக இருந் தால் ஜீப்பில் போவார். ராதாவையும் அழைத்துக் கொண்டு போவதாக இருந்தால் அம்பாசிடர் காரில் போவார். காரின் முன் சீட்டில் அவர் உட்கார்ந்து கொள்வார். பின் சீ ட்டில் ராதா உட்கார்ந்து கொள்வாள்.

"ராதா!"
"சார்"

"வந்து ஆறுமாத காலம் ஆகப்போகிறதே! நீ ஒருநாள் கூட சினிமாப் பார்க்கவில்லையே?’’

'அதெல்லாம் மறந்து போச்சு சார்! டிரான்சிஸ்டர் வச்சுப் பாட்டை மட்டும் கேட்கிறேன்!'

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/11&oldid=1545072" இலிருந்து மீள்விக்கப்பட்டது