பக்கம்:மிஸஸ். இராதா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ராதா, வாழ்க்கையில் கவலைகள் தோன்றலாம்; ஆனால் வாழ்க்கையே விரக்தியாகி விடக்கூடாது. கறியிலே உப்பு கூடிப் போயிட்டா அதைத்தூக்கியா எறிஞ்சிடுகிறோம் அதிலே கொஞ்சம் புளியைச் சேத்தா அது சரியாப் போகுதுல்ல! அது மாதிரித் தான் வாழ்க்கையும்!”

“மனப்புண், வெட்டுக்காயங்களைவிடக் கொடியது சார். மருந்தோ, மந்திரமோ அதுக்குப் பிரயோசனமில்லே சார்! அதே மனம்தான் சார் அதுக்கு மருந்து! நான் கொஞ்சம் கொஞ்சமா அதை ஆற்றிக்கிட்டு வர்றேன்! வேறே ஒண்ணுமில்லே சார்!”

"எல்லாம் சரியாப்போயிடும். காலம்தான் எல்லாத்துக்கும் மாமருந்து. எனக்கு இவ்வளவு சொத்து இருந்தாலும், எனக்கென்று சில கவலைகள் இருக்கே! அதுக்காக நான் சாப்பிடாமல் இருக்கேனா? சிரிக்காமல் இருக்கேனா? கணக்கு வழக்கைப் பார்க்காமல் இருக்கேனா? விசிறி இல்லாத போது வியர்க்கிற மாதிரி கொஞ்ச நேரம் கவலைப்படுவேன். நீயும் அப்படித்தான் இருக் கணும்! என்ன நான் சொல்றது?’’

'நீங்க சொல்றது எதையும் நான் தட்றது இல்லை சார்!’

சடையப்பர் ராதாவைக் கூட்டிக் கொண்டு போகும் போதெல்லாம் இப்படிப்பேசுவதுண்டு. ராதா எதையும்தட்டிப் பேசமாட்டாள். பெரிய அதிகாரியிடம் பேசும்போது சார் என்று மட்டும் பதில் கூறும் சின்ன அதிகாரியைப்போல் மறு வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசமாட்டாள்.

"ராதா!'
“சார்!”,

“உன்னைப்பற்றி நமது எஸ்டேட்டில் என்ன நினைக்கிறார்கள்?”

“நான் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை சார்!”

"நான் கேட்பது வேறு! நீ நினத்துக்கொண்டு பதில்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/12&oldid=1549376" இலிருந்து மீள்விக்கப்பட்டது