பக்கம்:மிஸஸ். இராதா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லுவது வேறு! உன்னை வேலைக்காரி என்று நினைக்கிறார்களா அல்லது உறவுக்காரப்பெண் என்று நினைக்கிறாகளா என்று கேட்கிறேன்’’.

“ராதா அம்மா என்று தான் நினைக்கிறார்கள். சில நேரங்களில் மரியாதையாக "அம்மா"! என்று அழைக்கிறார்கள். இதில் நான் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது சார்!"

"நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். இனிமேல் யாராவது உன்னைப்பற்றிக் கேட்டால் நீ தான் என் செக்ரட்ரி என்று சொல்லி விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.”

“ரொம்ப மகிழ்ச்சி சார்! சில்வர் ஸ்டார் எஸ்டேட்டுக்கு செக்ரட்ரியாக வருவதென்றால் நான் பாக்கியசாலிதான்!”

"பின்னே என்னம்மா ஒன்றும் படிக்காதவனெல்லாம் பழக்கத்துனாலே மானேஜர், காஷியர்னு இங்கு சொல்லிக் கொண்டு திரியும் போது, பி. ஏ. படிச்ச ஒரு பொண்ணு எனக்கு செக்ரெட்ரியா வர்றது என்ன தப்பு?”

"நான் பி. ஏ. படிச்சவங்கிறதை நீங்கதான் அங்கீகரிச்சிருக்கீங்க சார்! எனக்கு, என் படிப்பு, நான் படிச்ச அந்தக் கல்லூரி வாழ்க்கை — இதையெல்லாம் நெனச்சா ஒரு கெட்ட சொப்பனம் மாதிரித் தெரியுது சார்!"

"சொப்பனம்கிறது தூங்கும் போது நடக்கிற உலகம். அது சிலருக்குப் படிப்பினையாகக்கூட அமைஞ்சுடலாம். ஆனல் உனக்கு நெஜ உலகமே சொப்பனமாக இருக்குதுங்றியே! அது தப்பம்மா!"

"கரெக்ட் சார்! பழைய நினைவுகள் என்னை அப்படி நெனைக்க வைக்கிறதே! தவறு என்கிற காரியங்களையும் மனிதர்கள் சில வேலைகளில் திரும்பத் திரும்பச் செய்கிறார்களே! அது மாதிரி தான் நானும்!”

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/13&oldid=1549379" இலிருந்து மீள்விக்கப்பட்டது