பக்கம்:மிஸஸ். இராதா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அதுனாலேதான் நான் சொல்றேன்—அடிக்கடி பழைய விஷயத்துக்குப் போகக் கூடாது; அதுவும் கெட்ட விஷயங்களை நெனச்சே பார்க்கக் கூடாது!"

ராதாவுக்கும், சடையப்பருக்கும் இப்படி அடிக்கடி உரையாடல் ஏற்படுவதுண்டு.

அன்று சடையப்பருக்கு அவருடைய மருமகனிடமிருந்து ஒரு தந்தி வந்திருந்தது. சடையப்பர் தந்தியைப் பிரித்துப் பார்த்தார். அவர் எதிர் பார்க்கவில்லை—அவரது மருமகன் ஆனந்தன் மனைவியோடு எஸ்டேட்டுக்குப் புறப்பட்டு வருவதாக அதில் கண்டிருந்தது. ஆனந்தன் குடகிற்கு வந்ததே இல்லை. இப்போதுதான் முதன் முறையாக வரப்போகிறான். திருமணத்திற்குப் பிறகு சடையப்பர் மகள் கீதாவும் தோட்டத்திற்கு வரப்போவது இதுதான் முதல் தடவை.

சடையப்பர் தந்தியைப் படித்ததும் மகளும், மருமகனும் மறுநாளே வரப்போவதை அறிந்து பரபரப்படைந்தார் கணக்குப்பிள்ளையைக் கூப்பிட்டார்; சமையல்காரனைக் கூவி அழைத்தார். மேஸ்திரி ஓடிவந்தான். எல்லோரிடமும் சடையப்பர் நாளைக்கு மாப்பிள்ளை குடும்பத்தோடு வருகிறாராம் என்று திரும்பத் திரும்பச் சொன்னார். மகள் மீதும், மருமகன் மீதும் அவ்வளவு பிரியம் சடையப்பருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் அன்று இரவு அவர் சரியாகத் தூங்கவே இல்லை.

"ராதா!"
"சார்!"

"என் மகளும், என் மருமகனும் வரப்போகிருர்கள்"

"ரொம்ப மகிழ்ச்சி சார்! கீதாவை இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கப்போகிறேன் சார்!"

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/14&oldid=1549380" இலிருந்து மீள்விக்கப்பட்டது