பக்கம்:மிஸஸ். இராதா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ஏன், அவள் படத்தைப் பார்த்திருப்பியே! நம்முடைய ஹாலில் இருக்கிறதல்லவா!”

“ஆமாம் சார்! ஆனல் தம்பதிகளாகப் பார்ப்பது மகிழ்ச்சியில்லையா சார்!”

“ராதா, உனக்கும் நன்றாகப் பொழுதுபோகும்!” கீதா மிக வும் நல்லவள். மாப்பிள்ளையும் அப்படித்தான். அவரும் பி. ஏ. படித்திருக்கிறார்; பெரிய பணக்காரர் வீட்டுக்கு ஒரே பிள்ளை! கீதாவும் ஒரே பெண். இரண்டு பேரும் தான் வீட்டிலே ! அதனுலே குடும்பத்திலே குறைச்சல் இல்லை; சொத்தோடு சொத்துச் சேந்தாச்சு! இல்லையா ராதா!”

“கரெக்ட் சார்! வில்லன் இல்லாத நாவல் மாதிரி நிம்மதியாகப் போயிடும்”

"என்ன ராதா சொல்றே!” மாப்பிள்ளைக்குத் தம்பி அல்லது அண்ணன், பெண்ணுக்கு நாத்தனர்--இவர்களெல்லாம் இருந்தால் தானே சார் பிரச்சினையே வருகிறது என்கிறேன்!”

"உண்மைதான் ராதா! எனக்கு அதில் அதிகமான அனுபவம் உண்டு!”

“உங்களுக்கு என்ன சார் அப்படி அனுபவம்!”

வாழ்க்கை என்பது கல்யாணத்தோட முடிஞ்சு போற சினிமா இல்லை ராதா. காதல் கல்யாணம் ஆனாலும் சரி, சம்பிரதாயக் கல்யாணம் ஆனாலும் சரி, தாலி கட்டியதற்குப் பிறகு தானே யுத்தமே தொடங்குது மண மாலைகளெல்லாம் வெற்றி மாலைகளாகி விடுமா என்ன? இன்னம் சிலருக்கு கல்யாணமான மறுநாளே குருக்ஷேத்திரம் தொடங்கி விடுகிறதே!”

“சார்!”
“என்ன ராதா!”

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/15&oldid=1549381" இலிருந்து மீள்விக்கப்பட்டது