பக்கம்:மிஸஸ். இராதா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ஒண்ணுமில்லே சார். உங்க முன்னுரை குடும்ப வாழ்க்கைக்கே ஒரு அபாய அறிவிப்பு மாதிரி இருக்கே சார்!”

“உனக்குத் தெரியணும்கிறத்துக்காகத் தான் இதெல்லாம் சொல்கிறேன். நீ இனிமேல் தான் வாழப்போறே அதுனாலே சொல்றேன்”.

“வேண்டாம் சார்! எனக்குப் பயமா இருக்கு சார்!”

“பயம் அவசியம் தான்! அதுக்காக எல்லாத்துக்கும் பயப்படக்கூடாது ராதா! சில பெண்கள் பயத்துக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் தெரியாமல் அழிஞ்சுபோயிருக்காங்க; பயம்கிறது கோழைத்தனம். மரியாதைங்கிறது பெருந்தன்மை!”

“சார் மெர்க்காராவுக்குப் போயி சாமான்கள் வாங்கவேண்டாமா?” என்று குறுக்கிட்டுப் பேச்சை நிறுத்த முற்பட்டாள் ராதா.

போகத்தான் வேணும் ஆனால் இன்னக்கி என் மனம் சரியில்லேம்மா! எங்கோ போய்ட்டேன். கீதா வர்றாள்னு தெரிஞ்ச உடனே என்மனம் பழைய காலத்துக்குப்போயிருச்சு”.

'நீங்க தானே சார் சொன்னீங்க பழைய விஷயங்களுக்குப் போகக் கூடாதுன்னு!”

"சொன்னேன்; சொன்னபடியா மனிதன் நடக்கிறான்?”

“எதையோ நினைக்கிறீங்க. ஆனால் சொல்லமுடியாமெ முழிக்கிறீங்க சார்!”.

"என்னைப் பெற்றவள் இருந்தாளே. என் தாய், அப்ப நான் இப்படியா வாழ்ந்தேன். தினசரி வீட்டில் போராட்டம்தான். குப்பைக் கூளங்கள் நிறைந்த வீடு; கூந்தலுக்குக்கூட எண்ணையில்லாநிலை; சாக்குப் பைகளைவிட கறுத்துப்போன எ ங் க ள் உடைகள்; கரிப்பிடித்த பாத்திரங்கள்; மண் வெடித்த அடுப்பு;

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/16&oldid=1549382" இலிருந்து மீள்விக்கப்பட்டது