பக்கம்:மிஸஸ். இராதா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாம்பல் பூத்த தரை—இப்படித்தான் அந்தக் காலத்தில் எங்கள் வீடு இருக்கும்.

"என்னைப் பிடித்த அதிர்ஷ்டம் நான் இந்த எஸ்டேட் முதலாளிக்குச் சுவீகார புத்திரனாக வந்தேன். இவருக்கு புத்திரபாக்கியம் இல்லாதிருந்தது. தத்தாக வந்ததும் குலமுறைப்படி என் பெயர் என் சொந்தப்பெயர் எல்லாம் மாறின. என் பெற்றோர்களின் பெயர்களும் மாறின. என் வீடு, வாசல், ஊர் எல்லாமே மாறிவிட்டன, நான் புதுப் பிறவியாகிவிட்டேன்.

“சுவிகாரம் வந்த மறுமாதமே எனக்குத் திருமணம் நடந்தது. நல்ல சம்பந்தம்தான். எனக்கு வாய்த்த மனைவியும் நல்லவள் தான்; பெயர் மரகதவல்லி — தமிழ் நாட்டிலுள்ள செட்டி நாட்டில் அழகாபுரி எங்கள் ஊர். நான் பிறந்தது பிள்ளையார் பட்டி என்றாலும் சுவீகாரம் போன ஊர்தான் இப்போது எனது சொந்த ஊர்.

“திருமணமான மறு வருஷமே கீதா பிறந்து விட்டாள். கீதாவின் மேல் நாங்கள் உயிரையே வைத்திருந்தோம். ஆனல் கீதாவின் தாயார்...?”

“அவுங்களுக்கு என்ன ஆச்சு சார்?”

"இருமலில் தொடங்கி காசமாக முற்றி மரணத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது ராதா!'

“அப்பறம் சார்?”

“எனக்கு இருபது வயதிலே கல்யாணம். இருபத்தோராவது வயதிலே கீதா பிறந்தாள். இருபத்திநான்காவது வயதில் நான் என் மனைவியைப் பறிகொடுத்தேன். எனக்கு இப்போது வயது நாற்பத்திரெண்டாகிறது!’ என்றார் சடையப்பர். அவர் குரலில் ஏக்கம் ததும்பி நின்றது.

"ஏன் சார் இரண்டாவது மணம் புரிந்து கொள்ளவில்லை?”

சரியான கேள்விதான்! எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்-

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/17&oldid=1549385" இலிருந்து மீள்விக்கப்பட்டது