பக்கம்:மிஸஸ். இராதா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தன கீதாவின் மீது உள்ள தணியாத பாசத்தினால் எல்லாமே தள்ளிக்கொண்டு போய் விட்டன.

“ராதா, என் மனத்தில் ஒரு ஆழமான கருத்து தழும்பாகிக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளை வைத்திருப்பவனைக்கூட இந்த உலகம் மதிக்கிறது; ஆனல் முதல் மனைவியை இழந்து இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டவனை இந்த உலகம் முக்கால் மனிதனாகத்தான் மதிக்கிறது. இப்படி ஒரு தாழ்வான எண்ணம் எனக்கு!’

'நீங்க நினைக்கிறது தப்பு சார்! நீங்க அப்பவே இரண்டாவது கல்யாணம் செய்துக்கிட்டிருக்கணும் சார்!’

“சரி; ராதா, எந்த ஒரு காரியத்துக்கும் ஆசை மட்டும் முக்கியமல்ல; சூழ்நிலைகளும் ஒத்து வரணுமில்லையா கீதா கைப்பிள்ளை. அந்த நேரத்தில் திருமணம் செய்துக்கிட்டா கீதாவின் தாய் வீட்டுச் சொந்தமே அறுந்து போயிடுமே!”

இன்னொரு காரணம் — இரண்டாவது கல்யாணம்னா, நல்ல பெண் அமையிறது. ரொம்பவும் கஷ்டம். காலையில் தயாரித்த வியாபாரமாகாத பொருள் அந்திக் கடைக்கு வருகிற மாதிரி கூன், குருடுகள் வந்து வாய்க்கும்- இப்படிப் பல பிரச்சினைகள்!”

“..........”

“ராதா, இன்னக்கி நான் ரொம்ப நேரம் உன்கிட்டே பேசிட்டேன். அதுவும் பல விஷயங்களைப் பேசிட்டேன் இல்லையா!”

"அதுனாலே ஒண்ணும் தப்பில்லே சார், உங்க செக்ரெட்ரி கிட்டேதானே பேசியிருக்கீங்க! ஏன் சார், கீதாவுக்கு என்ன வயசு?’’

"இருபதுக்குள்ளேதான் இருக்கும். எங்க ஜாதியிலே இருபதுக்குள்ளே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணாட்டா பலவித மாகப் பேச ஆரம்பிச்சிடுவாங்களே?”

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/18&oldid=1549387" இலிருந்து மீள்விக்கப்பட்டது