பக்கம்:மிஸஸ். இராதா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"என்னைக்காட்டிலும் இரண்டு வயது இளமை அப்ப நான் கீதான்னு கூப்பிட்டா தப்பில்லையே!”

"இதிலென்ன தப்பு! தாராளமாகக்கூப்பிடு! மாப்பிள்ளைக்கு கீதாவைவிட இரண்டு வயது கூட. உத்தியோகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; பெரிய பணக்காரர். கீதாவைப் பொறுத்தவரை இனிக் கவலைஇல்லை’.

“ஏன் சார் நீங்க ஏன் இப்படிச் செய்திருக்கக் கூடாது?”

"எப்படி?”

“மருமகனையே இங்கே கொண்டுவந்து வச்சிக்கிட்டா எப்படி இருக்கும்? கீதாவையும் அடிக்கடி பார்த்துக் கிட்டமாதிரி இருக்கும்; உங்களுக்கும் ஒரு மனச்சாந்தி. மாப்பிள்ளையும் எஸ்டேட் வேலையைப் பழகிக் கொள்வாரே?”

“எனக்கு அப்படி ஒரு திட்டமும் உண்டு ராதா! எதற்கும் நேரம், காலம் என்று இருக்கே!”

“இந்த முறை அதை ‘டிசைட்’ பண்ணிட்டாப் போகுது!”

“மாப்பிள்ளையின் நோக்கம் அறிந்துதான் அதைப்பேசனும். எடுத்த எடுப்பிலே பேசிட்டா காரியம் கெட்டுப் போனலும் போயிடுமே!”

“எல்லாவற்றையும் கீதா மூலமே பேசிட்டாப் போகுது! கீதா சொல்றதை அவர் தட்ட மாட்டார் அல்லவா?”

"தட்டவே மாட்டார். கீதாவின் தாயாரிடத்தில் நான் எப்படியோ, அப்படித்தான் என் மாப்பிள்ளையும். குடும்பத்துக்கு அது அவசியம் ராதா! புருஷனுக்குள் மனைவி அடக்கமானவள் என்கிறார்கள். மனைவி சொல்றதையும் புருஷன் கேட்டால் தான் அது உண்மையாகும்! மனைவியை வெறும் சமையல் காரியின்னு நெனச்சாச்சுன்னா மனைவி மனத்திலே ஏதாவது புகுந்து கொள்ளும். நம் கோட்டைக்குள்ளே எதிரியின் ஆள் ஒருவன் நுழைந்து

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/19&oldid=1549388" இலிருந்து மீள்விக்கப்பட்டது