பக்கம்:மிஸஸ். இராதா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டாலே போச்சு! படிப்படியாக நாம் கோட்டையை இழந்து விடவேண்டியது தான். அது மாதிரிதான் மனைவியின் உள்ளமும்!”

“சார், நீங்க ரொம்பவும் உயர்ந்தவங்க சார்! கொஞ்சநாள் தான் நீங்க மனைவியோடு வாழ்ந்தீங்க! அந்தக் காலத்திற்குள்ளே ஒரு பெண்ணின் மனத்தை நல்லா அறிஞ்சு வச்சிருக்கீங்களே சார்!”

"நல்ல மனைவி கிடைச்சா, புருஷன் எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவான். மனைவியே எதிரியானவளா அமஞ்சிட்டா வாழ்க்கையே சூன்யமாப் போயிடும்!”

"அமைறதுன்னு என்ன சார்! கடவுளாப்பார்த்து ஏற்பாடு செய்யிறதா?”

"அப்படியில்லை! முன்பின் தெரியாத பொண்ணைத்தான் கல்யாணம் பண்றாங்க. மனப்பொருத்தம் சரியாகப்போனால் அமஞ்ச மாதிரிதான்!”

“சரி, பார்த்து, விரும்பி, கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க கூடப் பாதியிலே பிரிஞ்சிடுராங்களே!”

“அது அதுங்க தலையெழுத்து! உதாரணத்துக்கு எடுத்துக்க? ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்றாங்க! எனக்கும் அப்படித்தான் பண்ணுனாங்க! நான் எப்படி அவளைப் பறி கொடுத்தேன். இதுதாம்மா விதி!”

“விதியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் சார். முடிவுகளையெல்லாம் விதியின்னு சொல்றதை நான் ஏத்துக்கிட மாட்டேன். இப்ப நீங்க இருக்கிறதை உங்க விதிங்கிறீங்க! நீங்களே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுவும் விதியா?”

"ஆமாம், என் விதிதான்!”

"அப்படின்ன முதலில் சொன்ன விதி என்ன ஆச்சு? ஒரு மனிதனுக்கு இரண்டு விதிகள் இருக்க முடியுமா?”

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/20&oldid=1549389" இலிருந்து மீள்விக்கப்பட்டது