பக்கம்:மிஸஸ். இராதா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“அடேயப்பா ராதா, நீ இப்படிப் பேசுவாய்ன்னு நான் நெனைக்கவே இல்லை!”

“நான், பி. ஏ. யிலே தத்துவம் படிச்சவள் சார்!”

"உன்னை ஈரோடு ஜங்ஷனிலே பார்த்ததுக்கும் இன்னக்கிப் பார்க்கிறதுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி இருக்கு!”

“அது கவலை சார்! மருந்து சாப்பிட்டால் கூட மெலிய முடியாதவர்கள் கவலைப்பட்டால் மெலிந்து விடுவார்கள் என்பதற்கு நானே ஒரு உதாரணம் சார்.”

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது மேஸ்திரி ஓடிவந்து கீதா அம்மாவும், மாப்பிள்ளை ஆனந்தும் வந்து விட்டதாக'ச் சொன்னான். சடையப்பர் வேகமாக எழுந்து வாசலுக்குப் போனார். ராதா மனதில் ஏதோ தீர்மானித்தவளாய் உள்வாசலிலேயே நின்று கொண்டு வரவேற்கத் தயாரானாள்.

பெரிய காரில் ஆனந்தும், கீதாவும் வந்து இறங்கினர்கள். சடையப்பர் மகளை அணைத்து வரவேற்றார். கீதாவும் ஆனந்தும் உள்ளே வந்தார்கள்.

“வணக்கம்" இருகரம்கூப்பி ராதா அவர்களை வரவேற்றாள்.

ராதாவைக் கூர்ந்து கவனித்த ஆனந்தன் திடுக்கிட்டுப் போனன்!

“என் பெயர் ராதா! சில்வர் ஸ்டார் எஸ்டேட்டின் செக்ரெட்ரி!” என்றாள்!

ஆனந்தின் முகத்தில் இருள் படர்ந்தது. அவன் நடையின் கம்பீரம் குன்றிப்போனது.

“இவள் வேறு பெண்ணாக இருப்பாளோ? இல்லே, கீதாதான் பெயரை மாற்றிக்கொண்டு ராதா என்கிறாளா?” — இந்தக் குழப்பத்திலே ஆனந்தன் உள்ளே நுழைந்தான்.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/21&oldid=1549391" இலிருந்து மீள்விக்கப்பட்டது