பக்கம்:மிஸஸ். இராதா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கீதா வருகிறாள்


செத்தபின் பிறக்காதே
செத்தபின் பிறந்தால்
பசுவாகப் பிறக்காதே
பசுவாகப் பிறந்தால்
பாவியான பெண்கள்
பாலுக்கு ஆசைப்பட்டு
பால் கறந்து விடுவார்கள்.
எருதுவாகப் பிறந்தால்
சண்டாளப் புலையர்கள்
உழுதடித்துக் கொள்வார்கள்.
ஆடாகப் பிறந்தால்
பத்ரகாளி தேவிக்கு
ஆடறுத்துக் கொல்லுவார்கள்.
செத்தபின் பிறக்காதே
ஆகையால் நீங்களோ
வாடாமல் வதங்காமல்
வைகுண்ட நகரத்தில்
மனம்குளிர வாழிரோ!

                       —குடகர் பாட்டு


து ஒரு எக்ஸ்டென்ஷன் ஏரியா. அதை எல்லோரும் புதுப் பட்டணம் என்று பட்டப்பெயரிட்டு அழைக்கத் தொடங்கி அந்தப் பெயரே பிற்காலத்தில் ஊர்ஜிதமாகிவிட்டது.

புதுப் பட்டணம், சாக்லெட் மிட்டாயைப்போல் சமசதுரமானது. குறுக்கும், நெடுக்குமாக தெருக்கள் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொள்கின்றன. புரியும்படியாகச் சொல்வதானால் பெங்களுரைப் போல் புதுப்பட்டணத்தில் பல சர்க்கிள்கள் உண்டு. மதுரை மாநகரில் தெருக்களுக்கு மாதங்களின் பெயர்கள் இருப்பதைப்போல் இந்தப் புதுப் பட்டணத்தில் தெருக்களுக்கெல்லாம் தேசியத் தலைவர்களின் பெயர்களே சூட்டப் பட்டிருந்தன. தமிழ்நாட்டுக்கே உரித்தான தாழ்வான புத்தியின்-

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/22&oldid=1549393" இலிருந்து மீள்விக்கப்பட்டது