பக்கம்:மிஸஸ். இராதா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படி எல்லாத் தெருக்களுக்கும் வட நாட்டுத் தலைவர்களின் பெயர்களே வைக்கப்பட்டிருந்தன. ஜவகர் சாலை, திலகர் சாலை, போஸ் மைதானம், ஆசாத் பூங்கா — இப்படித்தான் அந்தப் பெயர்கள் இருந்தன.

புதுப்பட்டணத்தின் வளர்ச்சியையும் கவர்ச்சியையும் கேள்விப்பட்ட பாண்டிச்சேரி கிறிஸ்துவ மிஷனைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளுக்கான ஒரு ஆங்கிலத் தொடக்கப்பள்ளியை புதுப்பட்டணத்தில் தொடங்கினர்கள். அந்தப் பள்ளிக்கு அருள் மலர் கான்வெண்ட் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் இரண்டு சிஸ்டர்கள்தான் அங்கு ஆசிரியைகளாக வந்தார்கள். அவர்களது கண்டிப்பான நிர்வாகத் திறமையாலும், கனிவான உபசரணைகளாலும் அருள் மலர் கான்வெண்ட் புதுப்பட்டணத்து மாளிகைவாசிகளை வெகு எளிதில், மிகவிரைவில் கவர்ந்து இழுத்துக்கொண்டது.

வீட்டுக்கொரு பிள்ளை விகிதம் அந்தப்பள்ளி சுவீகரிக்கத் தொடங்கியது. தாங்கள் குடியிருக்கும் புதுப்பட்டணத்திற்கு மரியாதையும் மதிப்பும் உயரவேண்டும் என்பதற்காக செல்வந்தர்கள் அனைவரும் அருள் மலர் கான்வெண்ட்டை கார்த்திகை மாதத்துக் கழனியைப் போல் கண்காணிக்கத் தலைப்பட்டனர்.

பொருள்கள் வாங்கிக் கொடுப்பதிலும் ரூபாய் அன்பளிப்பு வழங்குவதிலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தார்கள். அமர்ந்து படிப்பதற்கான டெஸ்க் முதல் அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கான அமெரிக்கன் என்சைக்ளோபீடியா வரை இலவசமாகவே வந்து குவிந்தன. சிஸ்டர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

“கர்த்தர் தான் எங்களுக்கு இவைகளைச் செய்கிறார்; இல்லாவிட்டால் நாங்கள் விமான நிலையத்திற்குப் பக்கத்திலேதான் கான்வெண்டை அமைப்பதாக இருந்தோம்’ என்று அடிக்கடி அவர்கள் மனதுக்குள்ளேயே 'ஸ்தோத்திரம்' செய்து கொண்டிருந்தார்கள்.

பிள்ளைகள் பெருகிவிட்டன. இரண்டு சிஸ்டர்கள் பள்ளிக்-

2

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/23&oldid=1549394" இலிருந்து மீள்விக்கப்பட்டது