பக்கம்:மிஸஸ். இராதா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுவை உணவு சில வேளைகளில் அவளுக்கு உப்பாகக் கரித்தது. சினிமாக்களில் கரக விளையாட்டு வந்துவிட்டால் இதயம் வெடித்து விடுமோ என்று பயந்து அவள் சினிமா, நாடகம் எதற்கும் போவதில்லை.

பள்ளியிலிருந்த மற்ற ஆசிரியைகள், நீலாவை, கல்யாணமாகாத கன்னிப்பெண் என்றுதான் முதலில் எண்ணிக் கொண்டார்கள்; பின்னர் விதவை என்று தீர்மானித்துக் கொண்டார்கள், ஆனால் இறுதி வரை, நீலா, யாரிடமும் உண்மையைச் சொல்லவில்லை; உள்ளத்தையும் இழந்துவிடவில்லை.

அந்தப் பாட்டி, அந்தச் சிறுமி, பியூன் பொன்னம்பலம்—இவர்கள் மத்தியில் என்றும் வாடாத பொன்மலராக இருந்து விட்டாள்.

(இந்தக் கதை, 1947-க்கு முன் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடந்தது. மற்ற விவரங்களை விரிவாகக் குறிப்பிடுவது நாகரீகமல்ல.)

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/98&oldid=1551132" இலிருந்து மீள்விக்கப்பட்டது