பக்கம்:மிஸஸ். இராதா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாட்டு அவரை உலுப்பி வைத்திருந்தது. புதிதாக வரக் கூடியவளும் நீலாவைப் போலவே குற்றம் சாட்டினால் அதற்கும் உடந்தையாவதா? இப்படி நினைத்த பெரியவர் பின் தலையசைத்தார்.

மறு திங்கள் கனகனுக்கும், மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த முத்தம்மாவுக்கும் மீனாட்சியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் மன்னர் பிறந்த நாள். அன்று புதுக்கோட்டை விழாக் கோலம் பூண்டிருந்தது. கனகனும் முத்தம்மாவும் பிரகதம்பாள் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். எதிரே ஒரு குதிரை வண்டியில் நீலா வந்து கொண்டிருந்தாள்.

"அத்தான், அந்த வண்டியிலே போகிற பெண் ஏன் நம்மையே பார்த்துக் கொண்டு போகிறாள்" — முத்தம்மா கேட்டாள் கனகனிடம்.

"நம்மைப் பார்க்க வில்லை, நமது குழந்தை கலைமணியைத்தான் பார்க்கிறாள்.

"என்ன அத்தான்!”

"ஆம் முத்தம்மா!" என்றானே தவிர, கனகன் முழு விவரம் கூறவில்லை.

கனகன் ஆண்மையில்லாத ஒரு அலி என்று நீலா குற்றம் சுமத்தியதை முத்தம்மா அறிந்தவளா?

"அப்போது எங்கிந்தோ ஒரு பாடல் ஒலித்தது. அது இது; 'ஒரு பொய்யை சொல்லி விட்டு வாழ்நாளெல்லாம் துன்பப்படுவதை விட ஒரு உண்மையைச் சொல்லி விட்டு இறந்து விடுவது நல்லது.”

நீலாவின் வாழ்க்கையில் நடந்து முடிந்த இந்தத் துன்ப நிகழ்ச்சிகள் அவளை நிம்மதியாகத் தூங்கவிடவில்லை. அவள் உண்ணும்

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/97&oldid=1551130" இலிருந்து மீள்விக்கப்பட்டது