பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

59


ப்படியாகத்தானே பெண் கிளி தன் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘இப்போது சொல்லுங்கள். ஆண்களை நம்பலாமோ?’ என்று கேட்க, ‘ஒர் உண்மையை நீங்கள் இருவருமே மறந்துவிட்டீர்கள்!’ என்றான் மாணிக்கம், சிரித்துக்கொண்டே.

‘அது’ என்ன உண்மை?' என்று ஆண் கிளி கேட்டது.

‘மனிதப் பிராணிகள்தான் அப்படியெல்லாம் செய்யுமே தவிர, மற்ற பிராணிகள் அப்படியெல்லாம் செய்வதில்லை என்னும் உண்மைதான் அது' என்று மாணிக்கம் சொல்ல, அதனால் உச்சி குளிர்ந்த ஆண் கிளியும் பெண் கிளியும் ஒன்றோடு ஒன்று குவாவி மகிழ, 'ஆமாம், உங்களால் எப்படி முக்காலத்தையும் சொல்ல முடிந்தது?' என்று கேட்டாள் மரகதம்.

‘சொல்வதை நம்ப ஆளிருந்தால் எதைத்தான் சொல்ல முடியாது? எல்லாவற்றையும் சொல்லலாம். 'முன் பிறவியில் பூனையாக இருந்தேன்’ என்றேன் நான்; ‘இல்லை' என்று உன் கணவரால் சொல்ல முடிந்ததா? முடியும்? ஏனெனில், நான் பூனையாக இருந்தது எனக்கும் தெரியாது; இவருக்கும் தெரியாது அல்லவா?' என்று கண் சிமிட்ட, 'அப்படியென்றால் எங்கள் பெயரை எனக்குத் தெரியாமல் அவளுக்கும், அவளுக்குத் தெரியாமல் எனக்கும் நீங்கள் சொன்னது எப்படி?’ என்று மாணிக்கம் கேட்க, 'அதுவா? ஒரு சமயம் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் சேர்ந்தாற்போல் வெளியூர் பஸ் ஒன்றில் பிராயணம் செய்து கொண்டிருந்தீர்கள். அப்போது உங்கள் காலடிகளுக்குக் கீழே இருந்த நாங்கள் அதைத் தெரிந்து கொண்டோம். தெரிந்து கொண்டதோடு மட்டுமல்ல; அங்கேயே ஒருவரை ஒருவர் காதலிக்கவும் செய்தோம். அந்தக் காதல் நிறைவேற நாங்கள் அப்படி ஒரு கதை கட்டி விட, அது 'காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல் பலித்துவிட்டது!’ என்றது ஆண் கிளி.