பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் வழக்கமும் இங்கில்லை. ஜகத்குரு தமது வேலையை அதிகாலையில் பிரும்ம முகூர்த்தத்தில் தொடங்கி இரவு பத்து மணிக்கு முடிக்கிறார். அதற்குப் பிறகு எவருடனும் பேசுவது இல்லை. பகல் 11 மணி முதல் 12 மணி வரை கொஞ்சம் அவகாசம் உண்டு அப்போது மெளனம் இல்லையானால் பேசுவார்.மாலை 5 மணி முதல் 6 மணி வரை சிறிது ஓய்வு உண்டு. அப்போதும் பேசுவார்.

பத்திரிகை நிருபர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் எல்லாரும் விருந்தினராக கெளரவிக்கப்படுகிறார்கள். அவர்கள் நன்கு உபசரிக்கப்படுகிறார்கள்.

சிறியனவும் பெரியனவுமாக சுமார் 100 கோயில்கள் சிருங்கேரியைச் சுற்றி உள்ளன. அவை எல்லாம் நல்ல நிலைமையில் உள்ளன. கோயில் பூஜைகள் ஆகம சாஸ் திர முறை வழுவாது நடைபெறுகின்றன.

சாரதா தேவி ஆலயம், சங்கர பகவத் பாதர் ஆலயம், மலஹனிகரேசுவர ஆலயம், வித்தியா சங்கரர் ஆலயம் முதலியவை மிக முக்கியமானவை.

சநாதன தர்மமும், இந்து மதமும் இந்நாட்டில் இன் னும் மறையாதிருப்பதற்குக் காரணம் கோவில்களே. வேத தர்மத்துக்குப் புறம்பானவைகளைக் களைந்து எறிந்து வேதநெறி எங்கும் ஓங்கச் செய்தார் சங்கர பகவத் பாதர். அவர் ஏற்றிய விளக்கு இன்னும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அவரது தன்னிகரற்ற வேதாந்த வெற்றியும், அவரது இலக்கியச் சுரங்கங்களும் சிருங்கேரி ஆலயங்-