பக்கம்:மீனோட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் 99 காப்பிப் பொடி, அஞ்சறைப் பெட்டி) ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். இது எப்படி நேர்ந்த தென்றுகூட எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. உத்யோகச் சலுகை ஏதோ கிடைத்தது. மதுரை தாண்டும் வரைகூட திகைப்பு சரியாய்த் தெளிய வில்லை. அவளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. மதுரையில் மீனாr. தென்காசியில் லோகநாயகி (ஆமாம். இனிமேல் வட காசிக்குப் போகப் போறேனாக்கும்!) திருநெல்வேலியில்மறந்து போச்சு. நாகர்கோயில்... கன்யாகுமரியில் கன்யாகுமரி. விடுதியில் மூட்டை முடிச்சுகளை எறிந்துவிட்டு, கடலில் ஸ்னாம்ை செய்துவிட்டு, முன்னால் அவளையும் குழந்தை களையும் போகவிட்டு நான் சற்றுப் பின் தங்குகிறேன் நெருங்க நெருங்க ஏன் ஒரு பயம்? திரும்பி விடலாமா? இனிமேலா? நீ மட்டுமா? நடக்கிற காரியமா? அதற்குத் துணிச்சல் இருக்கிறதா? திரும்புதல் என்பதே கிடையாது: தெரியுமோன்னோ? திரும்புதல், மன்னிப்பு சென்று போனவை பரிகாரம், விடுதலை-ஏன், சொற்களே மாயமான்கள், மனிதன் துணை தேட அமைத்துக் கொண்ட கருவி. அவைகளின் அடிப்படை பயத்தின் மேல் மனித சுவர்க்கமே தாங்கி நிற்கிறது; பொய் மேல் எழுப்பிய பொய்க் கட்டிடம். காத்திருந்த வயது இத்தனை கழிந்தது கணக்குத் தெரிய வில்லை. கோயில் வெளி வாசல் கடந்து ப்ராகாரம் தாண்டி, உள் வாசல் புகுந்து உள் ப்ராகாரத்தில் பாதி சுற்றி சன்னிதானத்தில் நுழைந்து, அவளுடன் நேருக்கு நேர் ஆவதற்கு இருக்கும் இந்த சொற்ப நேரத்துக்கு வந்திருக்கும் கனத்தின் அழுத்தம், உள் பரபரப்புத்தான் தாங்க முடிய வில்லை. ஒரு கையால் மார்பை அழுத்திக் கொள்கிறேன். திரும்பி விடலாமா? யாரோ, எங்கோ சிரிக்கும் சப்தம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/100&oldid=870176" இலிருந்து மீள்விக்கப்பட்டது