பக்கம்:மீனோட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனோட்டம் 12 'டி காயத்ரீ இங்கிலீஷ் நமக்குப் புரியாது டீ! படம் வேறே சுருக்க முடிஞ்சுடும். கணிசமா சிவகவி போகலாம்? அவள் அம்மையின் சிபாரிசு. 'நீ என்னம்மா டிபன் கட்டினே? கண்ணன் வெறுப்புடன் உறுமுகிறான். (கட்டைத் தொண்டை கரிக்கிறது. போன வருடம் கூட குழலாய் ஒலித்த குரல்.) பசி வேளையில் டப்பா வைத் திறந்தால் குப் பக்கத்துப் பையன் மூக்கைப் பிடிச் சுண்டு நகர்ந்தால் எனக்கு மானம் போறதே, போச்சே! சொன்னாலும் பொருந்தச் சொல். என் கை ஊசiே ஊசாதே! நீ சொன்னால் நாம் நம்புவேனா என்ன? மோருஞ் சாதத்தில் சேப்பங்கிழங்குக் கறியை ஊறப் போட்டால்? மணக்குமா? 'சின்னத்தட்டுலே தனியாத்தானேடா வெச்சேன்!” "தட்டுதான் சோத்துலே முழுகிப் போச்சே! ஆமாம், பழையதா? நீ பிசையறபோதே சந்தேகப்பட்டேன், என் கணிக்குமில்லாத் திருநாளாய் இன்னிக்குப் பால், தயிர், வெண் ணெய் தாளிப்பு சடங்கெல்லாம் தடயுடலாயிருக்கேன்னு, பின்னே என்ன வேலைக்காரிக்கு அப்படியே தூக்கிக் கொடுக்கணுங்கறையா? ஒருநாள் சாப்பிட்டா குடல் கறுத் திடுமா? இதையே ப்ரிட்ஜ்லே வெச்சு ஹோட்டலில் பகாளா பாத்துன்னு பீங்கான் கிண்ணத்துலே பரிமாறினால், காசைக் கொடுத்து, அள்ளி மொக்குவேள்! சரிதான் நிறுத்தும்மா கண்ணன் சீறினான் (இதுகள் தான் விழுதாய் தாங்கப் போகும் பிள்ளைகள்) நீ வேலைக் காரிக்கு கொடுத்தால் அவள் கழுநீர்த் தொட்டியில் கொட்டி விடுவாள்னு என் தலையில் கட்டினாயாக்கும். காடி நெடி, போலீஸ் என்னைப் பிடிச்சுண்டு போகாமலிருந்ததே பெரிசு’ ஒரு நாளும் இருக்காது என் கை ஊசாது, புளிக்காது. "இருக்கு” "இல்லை” "இருக்கு” 'இல்லை’ அமணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/13&oldid=870235" இலிருந்து மீள்விக்கப்பட்டது