பக்கம்:மீனோட்டம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயா 145 மூக்குத்தி திகுதிகு - அதைவிட கண்கள். எனக்கு கண் கூசுறது. நெற்றியில் குங்குமம் சுடர் விடறது. சிவப்புப் பாவாடை. நீலத் தாவணி...” தாத்தாவின் கண்கள் விரிந்தன. பேச்சு, மூச்சாய் வந்தது. நேற்று கடைசி அலங்காரம்...மளிகைக் கடை சபாபதி நாடான் மண்டகப்படி...

-தோளில் பச்சைக்கிளி. தலையை ஸ்ொகுஸா திரும்பிப் திரும்பிப் பார்த்துண்டு...”

எங்களுக்கு எலும்பெல்லாம் உருகி அங்கங்கே கட்டி தட்டிண்டு தொண்டையை ஒரே அமுக்காய் அமுக்கி

  • -இரை தின்ன பாம்பு மாதிரி முழங்காலில் இடிக்கறது. பின்னல், என்னைப் பார்த்தது சிரிச்சுண்டு, ஒரு கையால் பின்னலைச் சுழட்டிண்டு நிக்கறா. சிரிப்பா? கண்ணா? எதன் ஒளி கூட? அப்பா எனக்குக் கண்ணைப் பறிக்கிறது. கண்ணை இறுக மூடிண்டு என்னை அழுத்தறபயத்தை ஒரு வழியா உதறிண்டு எழுந்திருந்தேன், ஹத்து தேவடியா முண்டை எட்ட ஒடு! எப்படி உள்ளே வந்தே? உரக்க சிரிச்சுண்டே பின்னலைச் சுழட்டிண்டே கர்ப்க்ரஹத்துள் ஒடிப் போயிட்ட அந்த சிரிப்பு-’

-செவிகளைப் பொத்திய வண்ணம், மரண அடிபட்ட விலங்குபோல் ஐயா அலையாடினார். தாத்தாவுக்கு முகம் பிசைந்தது. ஐயாவின் முதுகிலும் முகத்திலும் பளார் பளார் என்று அறைந்தார். 'ஐயா பாவி ஜன்மேதி ஜன்மமாய்க் காத்திண்டிருக் கிறவாளுக்கும் கிடைக்காத பேறு நிமிஷத்தில் அடைஞ்சுட்டு நிமிஷமாய்க் குடி கெடுத்துட்டியே! உன்னைப் போல் பாக்ய வான் உண்டா? பாவியும் உண்டா? என் பாட்டையும் நோட்டையும் தூக்கி உடைப்பில் போடு...!’ -ஐயாவைக் கட்டிண்டு கதறினார். எங்களுக்குப் பயமா யிருந்தது. ஐயா படுக்கையை விட்டு எழ வாரம் ஆயிற்று. அவர் யாரோடும் பேசவில்லை, கஞ்சியோ, ரஸ்மோ கொடுத்தால் உண்டு. இல்லையேல் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/146&oldid=870271" இலிருந்து மீள்விக்கப்பட்டது