பக்கம்:மீனோட்டம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மீனோட்டம் அடேயப்பா எத்தனை நாட்கள் ஆயின!” என்றான். "ஆனால் என்ன? இப்பொழுது பார்க்கையில்”நிமிஷங்கள் மாதிரியிருக்கின்றன-- . "உலகில் நிமிஷங்கள் தாம் உண்டு. நிரந்தரம் ஏது? "ஆனால் நிரந்தரத்தையே தம்முள் அடக்கிய நிமிஷங் களும் சில இருக்கின்றன-அவைகளாவது இருப்பதினால் தான், நாம் இருக்கிறோம். அதுவும் இல்லாவிடில் அப்புறம் உலகில் இருக்கத்தான் என்ன இருக்கிறது? "நிமிஷங்கள் அடங்கிய நிரந்தரம்-நிரந்தரம் அடங்கிய நிமிஷம்” “நாளையக் கவலை நாளைக்கு-இன்றைய தினம் இன்று- என்றாள் அவள் மெதுவாய்; அடியெடுத்துக் கொடுப்பது போல். பாதி மயக்கத்தில் விழித்தவன்போல் அவன் திடீரென்று "நாம் இப்பொழுது என்ன பேசிக் கொண்டிருக்கிறோம்?” என்றான். படும் வேதனையில் புருவங்கள் சுழித்துப் போயிருந் தன. பழைய நினைவுகளின் போதை அவனை இன்னும் முற்றிலும் மூடவில்லை. ‘'நீ அன்று பார்த்த நாடகத்திலிருந்து சில வசனங்கள்-’ துரத்திலிருந்து வரும் அலைகளின் ஒசை அவர்களிடை யில் சுருதிபோல் இழைந்து கொண்டிருந்தது. 'நீ அவைகளைச் சொல்கையில் பிரமிக்கும்படி யிருந்தாய்-’ மேடைக்கே ஒரு களையுண்டு. அதில் நிற்கும் இடங்கள் உண்டு. விளக்கு வேலைப்பாடுகள் உண்டு. மேக்-அப்' சூட்கமம் உண்டு. தவிர பார்க்க வந்தவர், கேட்க வந்தவர் மனநிலையுண்டு-’ 'நீ என்னை அன்று வாரிக் கொண்டு போனாய்-’’ என்றான் தனக்குள், “அத்துடன் இல்லாமல் உங்களை நாடகத்துக்கு கூட்டிக் கொண்டு வந்த சினேகிதன் வேஷ அறைக்கு’ (Green Room) வேறே கூட்டிக் கொண்டு வந்து விட்டான் இல்லையா? அவனும் எங்கள் முதலாளியும் பழக்கம். இவர்தான் போலீஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/27&oldid=870351" இலிருந்து மீள்விக்கப்பட்டது