பக்கம்:மீனோட்டம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மீனோட்டம் வேனுமானால் நண்டு பிடிக்கலாம், கூவம் நதியும் பக்கிங் ஹாம் கால்வாயுமிருக்கிறது-நிறையச் சேறு எடுக்கலாம்-1 :ஏன், பார்த்தசாரதி கோயில் குளம் இருக்காமே! அதிலே-!”

பாசி தான் மிதக்கும்-இடையிடையில் பிரேதமும் மிதக்கும்-”

அவள் முகம் 'சடக் கென மாறியது. என் வார்த்தையில் ஏன் இவ்வளவு வெடிப்பு? எனக்குப் புரியவில்லை. சமய மில்லா சமயத்தில் என் வாயில் ஏன் இந்தச் சம்பந்தமில்லாத அசம்பாவித வார்த்தை? எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று என் மார் நோவு பொறுக்க முடியவில்லை-பந்துபோல் சுருட்டிச் சுருட்டியடைத்தது...பொறுக்கமுடியவில்லை. X X X X மீண்டும் அதே பொரியும் மணல்தான். ஜீவனற்று, பிரேதம் போல் நீலம் பூரித்த ஆகாயம் துரத்தில் காணலில் ஊர்த்தோப்பு நடுங்கியது. காலை வேளையிலேயே, கடும்ை யான வெயிலில் என் கண்கள் இருண்டன. தவிர, பசி காதை அடைத்தது. வெறும் வயிற்றுடன் காலையில் பன்னிரண்டு மைல் நடந்து வந்திருக்கிறேன். காலணா இட்டிலி வாங்கு வதற்குக் கூட கையில் வழி இல்லை, கூடிவரம் செய்து இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும். எல்லாம் அதொருகாலம்-இதொரு காலமஅக்ரஹாரத்துக்குப் போனால் பழைய சினேகிதத்தை வைத்துக் கொண்டு ஒரு வாரம் தள்ளலாம். என் பிழைப்பு அப்படியாகி விட்டது, எல்லாம் அதொருகாலம்...இதொருகாலம்... ஒரு கை தண்ணீர் குடித்துவிட்டுப் போகலாம் என்று கால்வாயில் இறங்கினேன். நான் இறங்கிய கரைப்பக்கத்தில் நெருப்பைக் குளிப்பாட்டிய நிறத்தில் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். தோய்க்கிற கல்லின் மேல் துணியைக் கும்மி வைத்திருந்தார். கரையில் ஒரு பொடி மட்டை விபூதி சம்புடம், பட்டைப் புகையிலை, காய்ந்து போன வெற்றிலை நாலைந்து இரண்டு கொட்டைப்பாக்குகள் - ள்ல்லாம்.அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/75&oldid=870451" இலிருந்து மீள்விக்கப்பட்டது