பக்கம்:மீனோட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மீனோட்டம் முழுக் கத்திரிக்காயை வாயைப் பிளந்து, காரப்பொடி யைத் திணித்துப் பொன்னிறத்தில் எண்ணெயில் வதக்கி, மைசூர் ரசமும் வைத்துவிட்டால்-ஐயோ! ஐயோ! சொர்க் கம். இல்லை, எனக்கு சொர்க்கம் வேண்டாம். ரசமே போறும். எங்களை உருவாக்கிய அந்நாளையச் சமையல்கள், ருசி கள், பசிகள், நடப்பு, பெரியோர் சிறியோர், தாரதம்மியம், மட்டு மரியாதை, பேச்சு, அடக்கம், ஒளிவு, இலைதழை காய், பூமறைவு, ஆசைகள். கோபங்கள், அன்புகள், மயக்கங்கள் எல்லாமே வேறு. (காலத்தோடு ஒத்துப் போகாது. இந்தக் கிழங்கள்; என்றுமே இதுகளுக்கு அந்தநாளும் வந்திடாதோ?’ பாட்டுத் தான்!) பொறி கண்டது பொரிந்து விடாது. கொழுந்து விட் டெரியக் கூசினாலும் தழல் கனிந்து தனக்கே ஒளிந்து வளர்கையில். எனக்கு எப்படித் தெரியும்? இந்த நாள்தான், ஆண் பெண் அடங்கலாக எல்லாம் கெட்ட வெளிச்சம். நெஞ்சத்தின் ஈரத்தையே சுவர்க்கும் வெளிச்சத்தின் வெய்யிலாப் போச்சே! "காதலா? கலியா? முளைச்சு மூணு இலை விடல்லே. பிஞ்சிலே பழுத்த வெம்பல், அதுவும் யார் மேல்? அபராதம் அபராதம்!! r:மிஷ்வா கூடிமிக்கணும். முன்னால் வாயை அலம்பு. கை, கால் சுத்தி பண்ணிண்டு விபூதியிடு, உதிரி வித்தை வேண்டாம். குழைச்சு பட்டை பட்டையா, சுவாமி படத்துக்குத் தோப்புக்கரணம் போடு- இரு. விளக்கை ஏத்தறேன். அம்பாளை மன்னிப்புக் கேள். ஜகன் மாதா! பத்து நாளைக்குப் பயலுக்கு ராச்சோறில் மண்ணை வெட்டிக்கொட்டு. குடும்பத்தின் பேரைக் கெடுக்க எங்கிருந் துடா முளைச்சே? உனக்காக நானும் பிராயச்சித்தம் 108 காயத்ரி பண்றேன்-வேளை போறாத நேரத்தில் பாவி வேலை வைக்கிறான். அடியே வண்டைக்காய் வாங்கிண்டு வந்திருக் கேன். மறக்காமல் குழம்பில் வதக்கிப்போடு போடறையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/95&oldid=870473" இலிருந்து மீள்விக்கப்பட்டது